திரைப்படங்களில்
நகைச்சுவை காட்சிகளை உற்று நோக்கும் போது,
தற்காலத்தின் பல நகைச்சுவை காட்சிகள்
அசுசை ஏற்படுத்துவதாக உள்ளது. சம காலத்தில்
நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை முகம் சுளிக்க வைப்பதாக
உள்ளது. (சந்தனத்தின் நகைச்சுவையே சிறந்தது என கொடி பிடிப்பவர்கள்
சண்டைக்கு வர வேண்டாம்)
பொதுவாக
நகைச்சுவை என்பது இரண்டாக பிரிக்கலாம்.
ஒன்று கருத்துரு சார்ந்தது; மற்றொன்று உடல் மொழி சார்ந்தது.
பொதுவாக இரண்டுமே நகைத்தல் சுவையை தரக்கூடியது தான்!!!!!
ஆனாலும்
இரண்டுமே கலவாத, அதே சமயத்தில்
ஒட்டாமல் தண்டவாளத்தை போல் பயணிக்க கூடியது.
விவேக்- வடிவேல், சந்தானம்- சூரி போன்ற இரட்டைகள்,
இதனை தெளிவுப்படுத்தும்.
கருத்துரு
சார்ந்தது என்றால், பேசுவதின் மூலமாக நகைச்சுவை உண்டாக்கக்
கூடியவை!!! அதில் விவேக் வல்லவர்.
அவரிடமிருந்து உடல் மொழி சார்ந்த
நகைச்சுவையை அதிகமாக எதிர்பார்க்க இயலாது.
உடல்மொழி
என்றால் வடிவேல் தான்!!! தனது
உடல் நெளிவுகளினால் , நகைச்சுவையை ஏற்படுத்தியவர்; இவரிடமும் கருத்துரு இருக்கும்; ஆனால் குறைவாக இருக்கும்.
வடிவேலும்
விவேக்கும் சம காலத்தில், திரைப்பட
உலகத்தில் கோலோச்சியவர்கள்.. இருந்த போதிலும், காலங்கள்
கடைக்கையில், விவேக்கினை விட, வடிவேலின் நகைச்சுவைகள்
தான் அதிகமாக ரசிக்கப்படுகின்றன. அதாவது
உடல் மொழி நகைச்சுவைகளே காலம்
கடந்தும் நிற்கும். சார்லி சாப்ளின் இதற்கு
உதாரணம்!!!
நடிகர்
நாகேஷ்ஷின் நகைச்சுவையில் உடல் மொழி அதிகமாக
இருக்கும். அடுத்த தலைமுறையில், கவுண்டர்-செந்தில் ஆகியோரின் நகைச்சுவை இருந்தது. இதிலும் கவுண்டமணியின் நகைச்சுவையில்
கருத்துரு அதிகமாக இருக்கும். அதிலும்
சிலவற்றில் வக்கிர புரிதல் நிலை
உண்டு!!!
சம காலத்தில், அந்த இரட்டை நிலையாக,
சந்தானம்- சூரியை எடுத்து கொள்ளலலாம்.
பெரும்பாலும் சூரி உடல் செய்கை
சார்ந்த நகைச்சுவை செய்கிறது. சந்தானத்தின் நகைச்சுவை கருத்துரு சார்ந்தது. அதிலும் மற்றவரினை சிறுமை
படுத்துவதன் மூலம், பொது மக்களினை
சிரிக்க வைப்பது!!!
பெரும்பாலும்
கருத்துரு சார்ந்த நகைச்சுவைகள் தான்,
காலத்தினால் அதிகமாக மாற கூடியவை.
நகைச்சுவை வறட்சி/வெற்றிடம் ஏற்பட
வாய்ப்பும் அதிகம்.
கருத்துரு
சார்ந்த நகைச்சுவையின், சம கால புரிதல்,
” மற்றவரை கீழ்நிலைப்படுத்துவது “ என்ற புரிதல் நிலை
நிற்கிறது!!! இந்த காரணத்தினால் தான்,
சந்தானம் உச்சம் பெற்றார் என்றாலும்,
இதுமாதிரியான நகைச்சுவை தரத்தினாலே, சந்தானத்தின் மீது வெறுப்பு நிலையும்
வந்துள்ளது. சற்று ஆழ்ந்து நோக்கினால்,
நகைச்சுவையின் வக்கிர நிலையாகவே எடுத்து
கொள்ளலலாம்!!!
இது மனநிலை என்பது, சந்தானம்
என்ற நகைச்சுவையாளனின் புரிதல் நிலை மட்டுமல்ல!!!
ஒட்டு மொத்த சமூகத்தின் நகைச்சுவை
புரிதல் நிலையாக உள்ளது!!! அதிலும்
இளைஞர் சமூகத்திடம் அதிகமாக உள்ளது!!!
ஒரு கூட்டத்தில் உள்ள ஒருவரை சிறுமைப்படுத்தப்படுவன்
மூலம், தன்னை பெரிய ஆளாக/
சிறந்த நகைச்சுவையாளானக உருவகப்படுத்த முயற்சிக்கும் நபர்கள் அதிகம்!!!. மேலும்,
பெண்களிடம் வீரத்தை காட்டும் நிகழ்வாகவும்,
இப்புரிதல் நிலை நடைபெறுகிறது. இது
கீழ்த்தரமான மனநிலைக்கு………. சக மனிதனின் உணர்வுகளை
புரிந்து கொள்ளாத நிலையே காரணம்!!!!
ஒரு செயலின் வெற்றி, ஒரு
நல்லெண்ணத்தினால் முழுமை அடையுமே தவிர,
கீழ்த்தரமான எண்ணங்கள் அல்ல!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment