வேகமான
வாழ்க்கை ஒடத்தில், ஒவ்வொரு மனிதனுக்கு வெற்றி
வருகிறதோ இல்லையே, மன அழுத்தம் நிச்சயமாக
வந்து விடுகிறது. எதிர்பார்ப்புகள் கூடி, வாழ்க்கையின் அர்த்தம்
புரியாமல், வாழ்க்கை ஒடத்தை நகர்த்தும் போது,
போனஸாக மன அழுத்தம் வந்து
விடுகிறது.
அந்த மன அழுத்தத்தை போக்குவதற்கு,
ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால்,
ஒரே பொழுது போக்கு சாதனம்/வழிமுறை, அனைவருக்கும் மன அழுத்தத்தை நீக்க
விடுமா?? என்றால், நிச்சயமாக கிடையாது.
சிலருக்கு
மீன் பிடிப்பது பொழுது போக்கு என்றால்,
மற்றொருவருக்கு, மீன் பிடிப்பதே தொழிலாக
அமைகிறது. பலருக்கு சினிமா பார்ப்பது, மன
அழுத்தம் போக்கும் விஷயமாக இருக்கலாம்!! சிலருக்கு
இல்லாமலும் போகலாம்!!! சிலருக்கு புகைப்படங்கள் எடுப்பது மன அழுத்தத்தை நீக்கும்
வழிமுறையாக அமையலாம்!!! காலம், சூழ்நிலை, செய்யும்
தொழிலை பொறுத்து, மன அழுத்தத்தை போக்கும்
வழிமுறைகளும் மாறுகின்றன!!!
எனக்கு
முகநூலில் கிறுக்கும் கிறுக்கல்களே, ஒருவகையான மன அமைதியை தருகின்றன.
மேலும் புத்தகம் படிப்பது பிடிக்கும்!!! புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்!!! இசை கேட்பதும் பிடிக்கும்!!!!
சினிமா பார்ப்பது பிடிக்கும்!! இருந்த போதிலும், முகநூலின்
கிறுக்கல் அளவிற்கு, மன அழுத்தத்தை நீக்கியதில்லை!!!
எதோ பெரிய அறிவுரை கூறி
விட்ட உணர்வு!!!! சமூகத்தை சீர்த்திருத்த வந்தவன் போன்ற புரிதல்!!!
நடந்த/நடக்கும் சம்பவங்களை பகடி செய்ததாக பேரானந்தம்!!!!
(இதெல்லாம் உண்மையல்ல என்று அறிவு சொன்னாலும்,
உள்மனம்- மேற்கண்டதை நினைத்து ஆனந்தம் கொள்ளும்).
நான் பார்த்த, படித்த, புரிந்த, யூகித்த
தகவல்களை, முகநூலில் பதிவாக இடுகிறேன். அது
சரியாக இருக்கலாம்/ தவறாக இருக்கலாம். விவாதிக்கும்
போது, சில புரிதல்கள் ஏற்படுகிறது.
அதற்கு நேர் எதிர்மாறாக…… சில
நேரங்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்திய
தருணங்களும் உண்டு !!!
நான் பெரும்பாலும் ,அடுத்தவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை. கோபம் வரும்
போது, அடக்கி சென்ற தருணங்கள்
நிறையவே உண்டு!!! அவை மனதில் அழுக்காக
மாறி நிற்கும். அந்த அழுக்கை/ அழுத்தத்தை
போக்கும் வடிகாலாக முகநூல் அமைகிறது என்றால்
மிகையாகாது!!!!
உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment