Saturday, November 14, 2015

நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

கல்லூரியினால் வெளியேற்றப்பட்ட பில்கேட்ஸ், இன்று உலகின் மிகப்பெரிய  பணக்கார அறியப்படுகிறார். அதே சமயத்தில், கல்லூரி நன்றாக படித்து வெளியேறிய சத்யா நதெள்ளா மைக்ரொசாப்ட் நிறுவனத்தில் சிஇஒ வாக உள்ளார். ஏன் இத்தகைய முரண்பாடு; வெற்றி தோல்விகளில் ஏன் இத்தகைய பாகுபாடு.

தனி மனித திறமையோடு புற சூழ்நிலையும், அதிஷ்டமும் வெற்றி தோல்விகளை நிர்ணய செய்ய சக்திகளாக உள்ளதாக எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால், பின்னிரண்டையும் முதலினால் மாற்ற முடியும் என்பது உண்மை. அதற்கு உன்னுள் இருக்கும் திறமையை அறிய வேண்டிய அவசியம்.

உளவியல் ரீதியாக மனிதனை ஆராய்ந்தால்,
1.    தனக்கு என்ன தெரியும் என்பதை அறிந்தவன்
2.    தனக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தவன்
3.    தனக்கு என்ன தெரியும் என்பதை அறியாதவன்
4.    தனக்கு என்ன தெரியாது என்பதை அறியாதவன் என்று நான்கு
வகையுள் அடக்கலாம். இவைகள் எல்லாம், ஒவ்வொரு மனிதனும் தன்னை பற்றி சுயபுரிதலின் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மனிதருக்கு சுயபரிசோதனை சாத்தியமா??” என்று கேட்டால், நிச்சயமாக முடியாது என்று கூட சொல்லலாம்.  ஆனால், தன்னை பற்றிய சுற்றத்தாரின் விமர்சனங்களை ஏற்று கொள்ள கூடிய நிலையில், நாம் மனம் இல்லை. அதுபோல், விமர்சனங்களும் நேர்மையான இல்லை என்பது வேறு கதை.

மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே, ஒவ்வொரு மனிதனின் உண்மையான வெற்றி என்று கூட சொல்லலாம். மனம் போன போக்கிலே மனிதன் செல்வதாலே, அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்கிறான். அதனை தீர்க்க முடியாமல் தவிக்கிறான். மனத்தை ஆட்கொண்டவனால், தன்னை பற்றிய புரிதலும், சுற்றுபுறம் சார்ந்த புரிதலும் எளிதாகி விடுகின்றன.

சுயத்தை புரிந்து கொள்வதில் உள்ள வேறுபாடுகளே, வாழ்க்கையின் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. அவைகளே வாழ்க்கையின் சுவராஸ்யங்களுக்கு காரணமென்றால் மிகையல்ல. மேற்கண்ட நான்கு வகையினரும், இத்தகைய வேறுபாட்டலே பிரித்து அறியப்படுகின்றனர்.

முதல் வகையினர், வெற்றியை எளிதாக பெற கூடியவர்கள். தன்னிடம் உள்ள திறமையை மட்டும் வைத்து முன்னேறுபவர்கள். பெரும்பாலான துறைகளில் வெற்றிக்கனியை பறித்தவர்கள் இவர்களே!!! தன்னிடம் இல்லாத திறமைகளை பற்றி கவலை படுவதும் இல்லை. அதை மாற்றவும் முயற்சி செய்ய மாட்டர்கள்.

இரண்டாவது வகையினரும் வெற்றியை பெறுபவர்களே!! ஆனால் வெற்றியின் சதவீதம் குறைவாக இருக்கும். தன்னிடம் இல்லாத திறமைகளை மட்டும் நன்கு அறிந்திருப்பர். தன்னிடம் உள்ள திறமையை கணக்கிட இயலாது.

அவனுக்கு எல்லா திறமையும் இருக்கும். ஆனால், அவனால் வெற்றியை ஈட்ட இயலவில்லையே??? “ என்று நிறைய மனிதர்களை பார்த்து யோசித்திருப்பீர்கள். அத்தகைய மனிதரே மூன்றாவது வகையினர். அவர்களிடம் உள்ள திறமை அறிந்திருக்க மாட்டர்கள். இவர்களுடைய வெற்றியின் சதவீதம் நடுத்தரமாக இருக்கும்.

உலகத்திலே, நான்காவது வகையினர் தான் அதிகம். அவர்கள் தான் பிரச்சனைக்கும் உரியவர்கள். தன்னை பற்றியும் எதையும் புரிந்து கொள்ளாதவர்கள்;

உளவியல் ரீதியாக நான்காக பகுக்கப்பட்டிருந்தாலும், இவர்களினை தன்னை அறிந்தவர்கள் என்றும், தன்னை அறியாதவர்களும் என்று இரண்டாகவும் பிரிக்கலாம். இப்பூலகில் அறிந்தவர்களை விட, தன்னை அறியாதவர்களே அதிகம் என்பதே வருத்தப்படுக்கூடிய விஷ்யம்.

ஒவ்வொரு மனிதனும், யோகாவின் மூலம் தன்னுடைய மனதை முதலில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருங்கள். பிறகு குறை மற்றும் நிறைகளை பட்டிலிடுங்கள். நானும் அந்த பணியைத்தான்பல வருடங்களாக முயன்று வருகிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்….” என்ற பாடல் வரி பொய்யாகுமா என்ன??

(கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்…. மாறுபட்ட கருத்துகளை வரவேற்கிறேன்அனைத்தும் சுய கருத்தே…)

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment