Saturday, November 14, 2015

கல்வி முறை மாற்றம்

நீண்ட நாள்களுக்கு பிறகு, விஜய் டிவியில் நீயா நானா பார்த்தேன். கோபிநாத் கோர்ட் போடவில்லை. ஏதோ ஷோவை மாற்றி விட்டார்களே??? என்ற எண்ணத்துடன் பார்க்க தொடங்கினேன். கல்வியின் கட்டமைப்பில் உள்ள இடர்பாடுகளையும், அதை மாற்றி அமைக்க வேண்டிய அம்சங்களையும் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பினரும் சொன்ன கருத்துகளும், நன்றாக ஆழமாகவே சிந்திக்க வைத்தது எனலாம்.

இன்றைய கல்வி நிலை, வளர்ச்சியை நோக்கி பயணித்தாலும், வியபாரம் ஆகிவிட்டதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், தடுப்பதற்கான வழியும் பெரிதாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நூறு சதவீத மதிப்பெண் பெற்ற மாணவன் மீதான சந்தேக பார்வை தவிர்க்க முடியாதாகிறது. மற்ற மாநிலங்களின் தேர்ச்சி விகிதத்தை விட அதிகம் என்று பெருமை பட்டு கொண்டாலும், போட்டி தேர்வில் பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில், மாணவர்களின் அறிவு திறன் அதிகமாகி வருவதையும், பெற்றோர்களிடம் கல்வி மீதான விழுப்புணர்வு அதிகமானதையும், விடைத்தாள் திருந்துதலில் உள்ள மாற்றத்தையும் நாம் மறந்து விட கூடாது.

மதிப்பெண் தேவைதானா??? கிரேடிங் முறையில் மாற்றலமே??? என்ற பல விவாதங்களும் நடைபெற்றது. மதிப்பெண் தவிர்த்து, மாற்று என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்ட எதுவும், பெரியதொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவிடவில்லை. எனவே, புதியதொரு நல்வகையிலான மாற்று கிடைக்கும் வரை மதிப்பெண் வரைமுறையை மாற்ற இயலாது.

இருபது-மூப்பது வருடங்களாக, நல்லதொரு முறையாக தெரிந்த கல்வி முறை, இப்போது வேப்பங்காயாய் கசப்பது காலத்தின் கட்டாயம். தவிர்க்க முடியாகிறது. கால சுழலிற்கு ஏற்ப, நாமும் மாற வேண்டிய அவசியம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதை உடனே செயல்படுத்துவதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறைவு.

புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகள்(creativity), தற்போதைய கல்வி முறையில் முழுவதும் இல்லை என்பதை முழுவதும் ஏற்க இயலாது. அதை முன்னிறுத்துவது ஆசிரியரே தவிர, முழுவதையும் கல்விமுறையே தந்து விட முடியாது. தாய் மொழி வழி கல்வியை தவிர்த்து, ஆங்கில வழி கல்வி முறையே சிறந்தது என்ற நடைமுறையில், புதிய யோசனைகளை எவ்விதம் கல்வி முறையில் எதிர்ப்பார்க்க முடியும். தன்னுடைய ஆதிக்கத்தை இந்தியர்களின் மனதில் உட்செலுத்துவது என்பதில்மெக்காலே பிரபு(ஆங்கிலேயர்) பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தியரி vs பிராட்டிகல் என்ற விவாதமும் நன்முறையில் அமைந்தது. தியரிக்காக பிராட்டிகலே தவிர, பிராட்டிகலுக்காக தியரி இல்லை என்பதை நானும் ஒத்து கொள்கிறேன்.

மானப்பாட கல்வி முறையானது, பெரிய விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. உண்மையிலே, சமூக நலனுக்கு எதிரானது; கல்வியின் நோக்கத்திற்கு எதிரானது என்றாலும், அந்த குழந்தை பருவத்தில் அனைத்தும் புரிந்து கொள்ள முடியுமா??? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். குறைந்த அளவு புரிதலோடு கூடிய மானப்பாட முறையே, பள்ளி பருவத்திற்கு ஒத்தது என்று நினைக்கிறேன்.

முதலில், கல்வியின் நோக்கம் தான் என்ன?? என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு துறை சார்ந்த அறிவை கொடுப்பதா அல்லது ஒரு செயலை சார்ந்த அறிவை கொடுப்பதா என்று எண்ணினால், நிச்சயமாக தவறு. தன்னை நல்வழிப்படுத்துவதற்கு, வாழ்க்கையை நல்வழிப் படுத்துவதற்கு தேவையான வழி முறைகளையும், ஏற்படும் சிக்கல்களை, தைரியம் எதிர்த்து போரிடுவதற்கான வழிகளை கூறுவதே ஆகும். 

இந்த வழிமுறைகளை, எந்தவொரு கல்வி முறையையும், ஆசிரியரும், பெற்றொரும் முழுமையாக தந்து விட முடியாது என்று நினைக்கிறேன். நம்முடைய தேடலும் முக்கியம்.

கல்வியை வியபாரமாக்க கூடாது என்று விவாதம் நடந்த இடமே, சத்திய பாமா பல்கலைகழகம். என்ன தான் இருந்தாலும், வியாபாரம் நோக்குமுடைய ஊடக வெளிசத்தின் முன்னால், அதை செயல்படுத்தும் கல்லூரிக்குள்ளே இருந்தே, இந்த கருத்தை, விவாதிக்க வேண்டி உள்ளது என்பது காலத்தின் கட்டாயம்.


||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||||||
|||||||||||உங்களை போல் ஒருவன்|||||
||||||||||||||||||||வேதை குமார் |||||||||||




No comments:

Post a Comment