மனிதன் எப்போதும் ஒரு விஷயத்தை, இரண்டு
கோணங்களில் யோசிக்கிறான். ஒன்று உணர்வு பூர்வமானது(உளம் சார்ந்தது). மற்றொன்று
அறிவு பூர்வமானது(பகுத்தறிவு- கல்வி சார்ந்தது ).
படிக்காத மக்கள் பெரும்பாலும், உணர்வு
பூர்வமானாக யோசிக்கின்றான். ஆனால், படித்தவன்
இரண்டையும் போட்டு குழப்பி கொள்கிறான். எனினும் பல இடங்களில் அறிவு பூர்வமாக
யோசித்து, தான் எப்போதும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என போலி
வேஷத்துடன் வாழ்கிறான்.
ஊழல் குற்றச்சாட்டுகளில், அரசியல்வாதிகள்
தண்டனை பெறும் போது, அதை உணர்வு பூர்வமாக கிராம புற மக்கள் அணுகும் போது, ஊழலை
மக்கள் ஏற்று கொள்கிறார் என்று எடுத்து கொள்கிறோம். படித்தவர்களும், தன்னுடைய
கட்சித் தலைவரும் தண்டனை பெறுவதை, அதே உணர்வு பூர்வமாக அணுகின்றனர். மாற்று கட்சியினரும், மற்ற
படித்தவ்ர்களும் அறிவு பூர்வமாக அணுகின்றனர்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 250 மக்கள் இறந்த போது, கடுமையான
மனநிலையொடு குற்றவாளியை அணுகி இருப்போம். ஆனால், அவரது
உயிரையே எடுக்க வேண்டும் என்றால், அதையும் உணர்வு பூர்வமாகவே மனம் அணுகிறது.
அப்துல் கலாம் இறப்பிலும் இதே மனநிலையே தொடர்கிறது.
ஒருவருடைய மரணத்தில், அறிவு பூர்வமாக யோசிக்க வேண்டியதில்லை. ஆனால், சிலரது
வக்கிர மனம் அறிவுப்பூர்வமாக யோசித்து குறை கூறி கொண்டிருக்கிறது.
போலியான வாக்குறுதிகளை தந்து, பணம்
கொடுத்து கூட்டத்தை கூட்டி, கட்டாயப்படுத்தி கடையெடுப்பு நடத்தி போலியான தலைவனாக
முன்னிறுத்தும் பிம்பத்தையே அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். கட்சி தலைவர்களின்
போலியான பிம்பத்தை விடவா..... அப்துல் கலாமின் உண்மையான பிம்பம் போலியானது????
சற்று சிந்தியுங்கள்!!!
உணர்வுகளை விற்று, அறிவை
முன்னிறுத்தாதீர்கள்.....
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment