மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதிய குழு தனது அறிக்கைகளை ,
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிடம் அறிக்கையை தாக்கல் செய்தார். சுமார் 24 சதவீதம்
ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக 18,000 முதல் அதிக
பட்சமாக 2.5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தியாக
இருக்கும் என நினைக்கிறேன். இதன பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய
அரசு அறிவித்துள்ளது. பல மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் தற்போது உள்ள விலைவாசி உயர்விற்கு
ஏற்றால் போல, அமையவில்லையென கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில்
, இந்த ஊதிய உயர்வு மிகவும் குறைவு என வருத்தம் தெரிவித்து உள்ளன.
CPI குறியீட்டு எண்கள் 4 சதவீதம் அளவில் உள்ளன. ஆனால்
WPI குறீயிட்டு எண்கள் பல மாதங்களாக மைனஸாகவே உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி செய்த
போது இருந்த பணவீக்கம், இப்போது வெகுவாக குறைந்து உள்ளது. ஆதலால் ஊதிய உயர்வும் குறைவாகவே
உள்ளது.
சங்கங்களின் பேச்சுகளை கேட்டால், பொதுமக்களின் முகங்களில்
நிச்சயமாக கோபக்கனலை பார்க்கலாம். ஏனெனில் இந்தியாவின் வாழும் ஒவ்வொரு இந்தியனின் நிலையும்
மோசமாகவே உள்ளது. ஏறத்தாழ 90 சதவீத மக்கள் முறைப்படுத்தப்படாத தொழிலில் தான் ஈடுப்பட்டுள்ளனர்.
அதிலும் விவசாயிகள், இந்தியாவில் சுமார் 60 சதவீதமாக உள்ளனர். அவர்களின் மாத வருமானம்
5000 ரூபாய் என சமூக பொருளாதார கணக்கெடுப்பு கூறுகிறது. கடந்த நிதியாண்டின் படி, இந்தியனின்
தனிநபர் வருமானம் 88,000 மாகவே உள்ளது.
ஊதிய குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் பட்சத்தில், விலைவாசி ஏற்றம் இன்னும்
அதிகமாகும் என்பது மட்டும் உண்மை. இதனால்,
பொதுமக்கள் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். விலைவாசி ஏற்றம் என்பது இரண்டு காரணங்களினால்
ஏற்படும். ஒன்று பொருளின் தேவை அதிகமாகும் போது விலையேற்றம் நடக்கும். இரண்டு பணம்
புழுக்கம் அதிகமாகும் விலைவாசி அதிகமாகும். ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது , இரண்டாவது
வகையினால் நிச்சயமாக பொருள்களின் விலை ஏறும் என்பது மட்டும் உண்மை.
பார்த்து சூதனாமான இருங்கா மக்களே!!!
அம்புட்டு தான் சொல்லிட்டேன்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
.
No comments:
Post a Comment