கடந்த சில தினங்களில் மட்டும்
தமிழ்நாட்டில், இரண்டு வகையான போக்குவரத்து மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளது. ஒன்று,. தலைநகராம் சென்னையில் மெட்ரோ ரயில்
நடைமுறைக்கு வந்ததை, தமிழ்நாடே கொண்டாடுவது, கொஞ்சம்
அபத்தமாகவே தெரிகிறது.
அடுத்தது. இன்று முதல் இரு சக்கர
வாகனங்களில் கட்டாயமாக தலைகவசம் அணிவதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது போல், பலமுறை
அறிவிப்புகள் வந்தாலும், அதை நடைமுறைப்படுத்த யாரும்
முன்வரவில்லை. ஒட்டுனர் உரிமம் பறிக்கப்படும் என்றவுடனே, பயத்தில்
தலைகவசத்தை வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். ” சட்டங்கள் கடுமையானால் தான், தப்புகள்
குறையும் ” என்பதற்கு சிறந்த உதாரணம்.
மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்திய
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள். அதே மாதிரி, சாலை
விபத்துகளுக்கு முதல் காரணமாக இருக்கின்ற ,மதுவை ஒழிக்க வேண்டும் என்பது
ஏதார்த்தமானது. ஆனால், நீதிமன்றத்தினால், மாநில
அரசின் கட்டுபாட்டில் இருக்கும் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த உத்திரவிட முடியாது
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, விலக்கு
அளிப்பது வருத்தமாகவே உள்ளது. ஏன் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது?? அவர்களின்
உயிரும் முக்கியம் தானே!! நடைமுறை சாத்தியம் குறைவு என்றாலும், சலுகைகள்
அளிப்பது தவறான முன் உதாரணம்.
நாம் அனைவரும் வாங்குகின்ற
தலைகவசத்தில், வெவ்வேறு அளவுகள் இருப்பினும், நாம்
அனைவரும் ஒரே அளவுள்ள தலைகவசத்தை வாங்குவது நல்லதல்ல. கவனித்து வாங்குகள்!!
இதே தருணத்தில், தலைகவசம்
அணியும் போது, சரியாக கண் தெரியாமலும், காது
கேட்காமலும் ஒட்டும் போது ஏற்படும் விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க
வேண்டும் போல!!!!
உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment