நம்முடைய இருசக்கர வாகனம் மிதமான
வேகத்தில் சென்று கொண்டிருக்கும். சிறிய வாகனங்களோ அல்லது பெண்களோ அல்லது
பெரியவர்களோ நம்முடைய வாகனத்தை விட அதிகமாக வேகத்தில் முந்தி சென்றால், நம்
மனம் உக்கிரமாகி விடும். நம்மை அறியாமல், வாகனத்தின் வேகம் அதிகமாகிவிடும். என்ன
மண்ணங்கட்டி மனசே தெரியல.....
இந்த மனநிலை, வாகனத்தின்
வேகத்தில் மட்டுமல்ல. எல்லா சூழ்நிலைகளிலும், இதே நிலையே தொடர்கிறது.
தம்முடைய சுய நிலையை தாண்டி, மற்றவரோடு
ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விடுகிறது. மற்றவருடைய சூழ்நிலை என்ன? அவரின்
திறன் என்ன? நம்முடைய திறன் என்ன? என்ற
கேள்விகளுக்கு விடை தெரியாமல், மற்றவருடன் ஒப்பிட்டு அளவில், போட்டி
தளத்தை உருவாக்கி விடுகிறது.
இது தவறான நிலைக்கே எடுத்து செல்லும் என நினைக்கிறது.
தன்னுடைய நிலைக்கு ஏற்ப செயல்பட்டால், வாழ்க்கை
இன்னும் சிறப்பாக இருக்கும்!!!!
உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment