Tuesday, July 14, 2015

நல்லவன் கெட்டவன்

மனிதர்கள் இரண்டு வகை தான். ஒன்று நல்லவன். மற்றொன்று கெட்டவன். யார் நல்லவன்? யார் கெட்டவன்? என்ற விவாதம் தனி கதை. அதைப்பற்றி இப்போது பேச வேண்டாம்.

சமுதாயத்தினால் நல்லவன் என்று குறிக்கப்படும் நபருடன் மட்டும் பழகுங்கள், கெட்டவனுடன் பழகாதீர்கள் என்று அறிவுரை பெரியோரால் வழங்கப்படும். இதை என்னால், முழுவதும் ஏற்க இயலாது.

நல்லவன் மற்றும் கெட்டவன் இருவருடனும் பழக வேண்டும். அனைவருக்கும் நல்ல குணங்களும் இருக்கும், கெட்ட குணங்களும் இருக்கும். இரண்டு குணங்களும், நமது நல்வாழ்வியலிலுக்கு தேவையான ஒன்று தான்.
நல்லவரிடம் உள்ள நல்ல குணங்கள் நம்மை முன்னேற உதவும். 

கெட்டவரிடம் உள்ள கெட்ட குணங்கள், நம் முன்னேற்றத்திற்கு தடையாக குணங்களை நீக்குவதற்கு உதவும். நல்ல குணங்களை மேம்படுத்துவதை விட, கெட்ட குணங்களை நீக்குவதே முழுமையான வெற்றி தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment