கிராமங்களில் வண்டி ஒட்டுவது என்பது, சென்னையை
விட கடினமானதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அப்பப்பா!!! எத்தனை பிரச்சனைகள்!!!
ஒன்று நாய், மற்றொன்று மனித நாய்
கிராமங்களில் ஏற்படும் விபத்துகளில், நாயின்
பங்கு அளப்பரியது எனலாம். அவங்களோட குடும்ப சண்டையில, நம்மளோட
குடும்பத்தையே நடு தெருவிற்கு கொண்டு வந்து விடும். நாய் மட்டுமல்ல, ஆடு, மாடு, கோழி
இவைகளும் சேர்த்து தான். சாலையில் செல்லும் போது, ஏதாவது மிருகத்தை அடித்து விட்டால், “கண்ணை
என்ன பொறாடியல வைச்சுகிட்டா வண்டி ஒட்டுற” என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.
மிருகங்களை ரோட்டில் விட்ட, அவர்களது தவற்றை உணராமல்...
” மனித நாய் ” என்ற
சொல்லாட்சி, கொஞ்சம் கடுமையானதாகவே தெரிந்தாலும், பகுத்தறிவற்ற
மனிதர்களை நாயுடன் ஒப்பிடுவதை தவறில்லை என்றே கருதுகிறேன். ஹட்லைட் போட்டுகிட்டு, எதிரில்
வண்டி வந்தாலும், டிம்மாக மாற்றாமல் செல்வது, இண்டீகேட்டர்
போடாமல் அல்லது சைகை கண்பிக்காமல் வண்டி திருப்புவது, வலப்பக்கத்தில்
இருந்து இடப்பக்கத்திற்கு திரும்பும் போது, மற்ற வண்டிகளை கவனிக்காமல் செல்வது, வளைவுகளில்
முந்துவது என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். எக்ஷமாக இருந்தால், அடீஸ்சனல்
வாங்கி கூட எழுதலாம்.
இந்த தவறுகளால் தான், பெரும்பாலும்
விபத்துகளே நடைப்பெறுகிறது. வண்டி ஒட்டும் போது ரூல்ஸையும் பாலோ பண்ண மட்டான்.
கெல்மெட்டாவது போடுங்கடான்னா, அதுவும் மாட்டங்குறது..... உங்களா என்ன
தான் பண்றது????
உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment