Tuesday, July 14, 2015

பேஸ்புக்கில் தவறான பகிர்தல்

பேஸ்புக்கில் சில பகிர்வுகளை பார்க்கும் போது, சிரிப்பு தான் வருகிறது. பல நேரங்களில் வேதனையாகவும் இருக்கிறது. தகவல்களை பகிர்கிறேன்என்ற பெயரில், பல பொய்மை தகவல்கள் வெளி கொணரப்படுகிறேன்.

அந்த செய்தி உண்மை தானா?” என்ற குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமல் இருப்பது, கொஞ்சம் வேதையான ஒன்று தான். தேதிகளை கூட பார்க்காமல் கூட, சில நேரங்களில் பகிர்தல் நடைபெறுகிறது.

நான் மருத்துவன்என்பதால், மருத்துவம் சார்ந்த பகிர்தலிலும், இதே தவறு நடைபெறுகிறது என்பதை உணர்கிறேன். இவைகளில் எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றி மற்றவர்கள் உணர வேண்டும். சில படித்தவர்களே செய்வது, வேதனையின் உச்சம்.

நான் பெற்ற தகவலினை, பிறகுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உங்களின் உயர்ந்த நோக்கம் புரிகிறது. அதற்காக, தவறான தகவலை தர வேண்டாம். ஒரு பொய்யான தகவலை சொல்வதை விட, தகவல் சென்றடையாமல் இருப்பதே மேல்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment