கடைத்தெருவில் நடந்து செல்லுகையில் துணிக்கடையிலோ, நகைக்கடையிலோ
விளம்பர பலகையில் நடிகரோ அல்லது நடிகையின் புகைப்படத்தை பார்த்திருப்போம்.
நடிகரின் மீதான அன்பினால், அந்த
கடைக்கு செல்ல மனம் விழையும் என்ற நம்பிக்கையில் அமைக்கப்பட்டிருக்கும். அதை கடையின்
முதலாளி, வியாபார
உத்தி என்ற பெயரிலும் நம்பிக்கையிலும் செய்து வருகிறார்.
இதையெல்லாம் தாண்டி, இன்னொரு
விஷயம் உள்ளது. அந்த புகைப்படத்தை, தன்னுடைய விளம்பர போர்டில் வைப்பதற்கு, அவர் அனுமதி வாங்கினரா? என்று
கேள்வி எழுகிறது. இது பெரும்பாலும் பெரும் நகரங்களில் நடைபெறுவதில்லை. ஆனால் சிறு
நகரங்களிலும், கிராமங்களிலும்
நடைபெற்று வருகின்றன. இதை நடிக நடிகைகளும் பெரிதாக எடுத்து கொள்ளப்படுவதில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ரோமியோ ஜிலியட் திரைப்படத்தில் டி. ஆர் பெயரை, அவருடைய
அனுமதியில்லாமல் பயன்படுத்தியாக வழக்கு தொடர்ந்திருந்தார். பிறகு பஞ்சாயத்து மூலம்
தீர்க்கப்பட்டது என்பது வேறு கதை.
ஆனால், ஒருவருடைய
திறனை புகழை, அவருடைய
அனுமதியில்லாமல், மற்றவர்கள்
தன்னுடைய சுய லாபத்திற்காக எடுத்து பயன்படுத்துவது திருட்டுக்கு மேலானது. இந்த
இடத்தில் தான் காப்புரிமை என்பது அவசியமாகிறது. ஆனால், தன்னுடைய
பெயருக்கும் புகழுக்கும் காப்புரிமை வழங்க முடியாதல்லவா? அந்த
இடங்களில், முன்
அனுமதி பெறுவது அவசியம் என்பதை உணர வேண்டும்.
சமீம காலங்களில், காப்புரிமை
பற்றிய விவாதம் சினிமா துறையில் அதிகமாகி வருகிறது. தசாவதாரம், லிங்கா
படப்பிரச்சனைகளுக்கு காப்புரிமை தான் காரணமாக அமைந்துள்ளது. இளையராஜாவும் இதே
காப்புரிமைக்காக தான் நீதிமன்றத்தின் அணுகினார்.
ஒருவருடைய திறனையும் பொருளையும், அவருடைய அனுமதியில்லாமல் எடுத்து கொள்வதென்பது அனைத்தும் துறைகளிலும்
நிறைந்தே இருக்கிறது. கம்யூட்டரில் சாப்ட்வேர், திருட்டு டிவிடிக்கள் என பட்டியல் நீளும்.
முழுவதும் திருட்டை ஒழிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!!! ஆனால், நம்மால்
முடிந்தவரை குறைக்க முயற்சிப்போம்.
உங்களில் ஒருவன்
‘உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment