பொது உலகில்
பெண் சுதந்தரம் எந்தளவிற்கு இருக்குமென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பெண்களின் கருத்து
சுதந்தரம் பெரிதும் மதிக்கப்படுகிறது.
வீட்டில்
அம்மா, மனைவி, அக்கா.....
இப்படி யார் சொன்னாலும் கேட்காத ஆண்மகன், சமூக
வலைதளங்களில் மட்டும், முகம் தெரியாத முகப்புத்தகத்தில் உள்ள
பெண்ணிற்கு, வாழ்த்துகளையும், லைக்குகளை
போடுகிறான்; அவர்களை சொல்வதை வழி மொழிகிறான். இதையே
வீட்டிலும் கேட்டு நடந்தால், நன்றாக தான்
இருக்கும்.
பெண்ணின்
மீதான ஆணின் இனக்கவர்ச்சியே இதற்கு காரணம். ஆனால், இந்த கருத்து
சுதந்தரத்தில் போலி கவர்ச்சியே உள்ளது. இதையெல்லாம் தாண்டி, சமூக வலைதளங்களில் நடைபெறும், பெண்களின் மீதான வக்கிரங்களும் அதிகம்.
நானும், ஒரு பெண்ணின் பெயரில், போலியான முகப்புத்தக அக்கவுண்டை ஒரு
வருடத்திற்கு முன் உருவாக்கினேன். அப்பப்பா முடியல..... ஆண்மகனின் தொல்லகள்....
ஒரு வாரத்தில் 1000 நண்பர்கள். 1000 பாலோயர்கள்... மார்க் பார்த்தார்..... ஏதோ கேள்விகளை கேட்டு என்னை முடக்கி
விட்டார்..... ”குட் மானிங் ” க்கே 50 லைக் வருமுன்னா பார்த்துகங்களேன்!!!
இன்பாக்ஸ் தொல்லைகள் வேற.....
பெண்ணிற்கு
கருத்து சுதந்திரம் இருந்தாலும், பாலியல்
தொடர்பான வக்கிரங்கள் அதிகம்... பெண்கள், முகப்புத்தகத்தை
கவனமாகவே உபயோகிப்பது நல்லது...
உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment