Monday, June 8, 2015

பல தேர்வுகளை நோக்கி...

காலை ஐந்து மணி…… அனைவரும் சற்றே துடிப்புடன் செயல்பட்டனர். அதில் பல பேர், ஆறு மணிக்குள்ளே குளித்து ரெடியாகிவிட்டனர். வேற எதுக்கு ???? எக்ஷம்முக்கு தான்!!!!!!

பலரும் பதற்றத்துடனே காணப்பட்டனர். சில பேருக்கு கண்கள் கூட சிவந்து தான் இருந்தது.  என்ன, கண் முழிச்சி படிச்சிங்களா??? “ என்று கேட்ட போது, ”இல்ல சார்….. இரண்டு நாளா சரியா தூக்கம் கூட வரல சார்சும்மா புரண்டு, புரண்டு படுத்துகிட்டு இருந்தேன் சார்….” (என்னையும் சேர்த்து தான்). இந்த விஷயம் கொஞ்சம் ஆச்சரியமாக கூட இருக்கலாம். ஆனால், சிறிதளவு மூளையை கசக்கினால், சில உண்மைகளை மறுக்க இயலாது.

போட்டி தேர்விற்கான இடங்களோ, குறைந்த அளவே உள்ளன. அதிலும், சாதி வாரியான உட்பிரிவிற்கு சென்றால், ஒற்றை இலக்க எண்களே கண் முன் வந்து நிற்கிறது. அப்புறம் மன அழுத்தம் வராமல் இருக்குமா என்ன??? இவ்வகையிலான மன நிலை, சித்த மருத்துவனுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு பட்டதாரி இளைஞனின் மன நிலையும் தான்.

அதிலும், ஆண் மகனாக இருந்தால், கூடுதல் பயம் வந்து விடுகிறது.( ஏதோ இரண்டு சார்ட் வாங்கினால், ஒரு சார்ட் ப்ரீ போல…). இந்த தேர்வில் வெற்றி பெற்றால் வாழ்க்கை பொன் போல ஜொலிக்கும் என்ற மாய பிம்பம் சமூதாயத்தினால் திணிக்கப்படுகிறது. எழுதப்படாத சட்டமாகவே இருந்து இருக்கிறது.

வாழ்க்கையே பணம் என்ற அச்சாணியில் சுற்றுவதாகவும், அதை பெற தகுதியற்றவன், வாழ்க்கையில் தோற்றவனாகவும், அறிவற்றவனாகவும் போலி பிம்பம், நகலிடப்படுகிறது. இந்த மன அழுத்தம், பெற்றோரினாலும், சுற்றி இருக்கும் சுற்றத்தார்களாலும், கற்பித்த ஆசிரியர்களாலும் சமுதாயம் என்ற போர்வையினால் பிரதிபலிக்கிறது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றவர்களா???? தேர்வில் தோல்வி அடைந்தவர்களே, சாதனையாளர்களாக மாறி இருக்கிறார். டெண்டுல்கர் படிக்காதவர் என்பதை காட்டிலும், சாதனையாளர் என்பதே முன்னிற்கிறது. அதை எப்போதாவது, நம் மனம் யோசித்துண்டா????  பணத்தை பெற்றவர்கள் அனைவரும் மனம் நிம்மதியை அடைந்து விட்டார்களா???? பணம் பெற்றவரை கேட்டால் புரியும். அதன், இன்னொரு பக்கத்தினை.

மூன்று மணி நேரம் தேர்வே, ஒருவனுடைய திறமையை முழுமையாக சோதிக்க முடியுமா??? என்பதே மிகப்பெரிய கேள்வி குறி. மானப்பாட திறனையல்லவா சோதிக்கின்றன??? இவ்வகையிலான மன அழுத்தங்கள், நன்றாக படித்தவர்கள் கூட எளிதாக தவறு செய்து விடுவார்கள். நாம் தைரியமாக இருக்க நெப்போலியனமல்ல: தெளிவாக பேச புத்தருமல்ல. இவ்வகையிலான பயம் உணர்வுகள், பெண்களுக்கு இல்லை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். நான்  சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அரசாங்க வேலையே, நம் வாழ்க்கையை குறிக்கோள் என்பதை விடுத்து, மற்ற வகையிலான செயல் முறைகளில் நோக்கி பார்வை செலுத்துங்கள்: பணம் வாழ்க்கைக்கு தேவை. ஆனால், பணமே வாழ்க்கையே என்பதை நோக்கி பயணிக்காதீர்கள். உங்களது மன சிறகை பறக்க விடுங்கள்: மாறாக ஒடித்து விட்டு பறக்க முயற்சிக்காதீர்கள்.

இல்லையென்றால், “ எனக்கு அதிஷ்டம் இல்லை….., எல்லாம் கடவுள் செயல்…..” என்ற வெற்று வேதாந்தாங்களில், தன்னை ஒளித்து கொண்டு, அடுத்த தேர்வை நோக்கி பயணித்து கொண்டிருப்போம்….. இப்படியாக பல தேர்வுகளை நோக்கி……….

||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||||||
|||||||||||உங்களை போல் ஒருவன்|||||
||||||||||||||||||||வேதை குமார் |||||||||||



No comments:

Post a Comment