மைதானத்தில் ஒரு பரபரப்பு தொற்றி கொள்கிறது. 48 வது ஓவரை வீச வருகிறார்
இங்கிலாந்து பவுலர் பின். இந்தியாவின் வெற்றி இலக்கு நீண்ட தூர பயணமாக மாறி விட்டது. ஒரு விக்கெட்
எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற நிலையில், ஜடேஜா 79
ரன்களுடன் களத்தில் உள்ளார். எனவே ஜடேஜாவின்
சதத்தையாகவது பெற்று விட வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியனின் கண்களும் டிவியில் மூகாமிட்டுள்ளது. முதல் பால்
டாட் பால் ஆகி விட, அடுத்த இரண்டு பந்துகளை எல்லை கோடுகளுக்கு விரட்டி 87
ரன் பெற்று விடுகிறார். இன்னும் 9 பந்துகள் உள்ள நிலையில், எப்படியும்
சதம் போட்டு விடுவார் என்று இதயம் படப்படக்கிறது. ஆனால், அடுத்த
பந்தோ, விக்கெட்டை பதம் பார்க்க, கனவுகள்
நொறுங்கி விடுகிறது.
விக்கெட்டை விழ்த்திய பின், சந்தோஷத்தில்
ஆர்ப்பரித்தார். அடுத்த நிமிடமே, ஜடேஜாவிற்கு
கை கொடுத்து, வாழ்த்து தெரிவிக்கிறார். இது தான்
ஜெண்டில் மேன் விளையாட்டு என்று கிரிக்கெட்டை சொன்னார்கள் போலும். இது மாதிரியாக, பல நேரங்களில், ஏதிரணி
வீர்ர்கள் ஏதேனும் சாதனை புரிந்தால் வாழ்த்துவதும் வழக்கமான நிகழ்வு. ஆனால், அந்த வாழ்த்துதல்
பேட்ஸ்மேனுக்கு மட்டுமே. பவுலருக்கு கிடைப்பதில்லை.
ஏற்கனவே 3-0 என்ற வெற்றி நிலையினை
பெற்றி விட்டதால், இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லை. இங்கிலாந்து
அணி இறுதி போட்டியில், ஆறுதல் வெற்றியை பெற்று விட்டது. டெஸ்ட்
தொடரில் வெற்றி பெற்ற பிறகு, இங்கிலாந்து அணி படு மோசமாக விளையாடியது. கடந்த தொடர்களிலும்
இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா
மற்றும் நியூசிலாந்து அணியிடம் டெஸ்டில் வெற்றி பெற்று, ஒரு நாள்
தொடரில் தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தினார்கள்
என்று சொல்லலாம். பொறுத்திருந்து பாருங்கள் என்ற தோனியின் வாக்கியத்தை, இந்திய
வீர்ர்கள் சாதித்து காட்டினார்கள். இதே வெற்றி அடுத்து
வரும் தொடர்களில் தொடர வேண்டும் எல்லோருடைய திண்ணமும். வாழ்த்துகள் !!!!
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment