Saturday, September 20, 2014

காதலை இப்படியும் சொல்லலாம்

பையன்: அம்மா! நேற்றைக்கு ஒரு ஜாதகம் புரோக்கர் கொடுத்தாரே, அத
சோசியர் கிட்ட பார்த்தியா???

அம்மா: பார்த்தாச்சு ! பார்த்தாச்சு!! நாலு பொருத்தம் தான் இருக்கு..
இந்த பொன்னு வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு….

பையன்: இரண்டு, நாளைக்கு முன்னாடி, மூணு ஜாதகம்
கொடுத்தாரே…..அது என்னாச்சு…….

அம்மா: அதுல ஒரு சாதகம் தான் பிடிபட்டுச்சு…. அதுவும் செவ்வாய்
தோஷம் கொஞ்சம் கூடுதல இருக்கு அதுனால அது
வேண்டாம்ன்னு சொல்லிடாரு……..

பையன்: சரி…. அண்ணனுக்கு எப்ப தான் கல்யாணம் நடக்குமா????

அம்மா: வர்ற தை மாசத்துல நடக்குன்னு சொல்றாருஇப்படி இரண்டு
வருடம் ஆகிடுச்சு!!!

பையன்: போன மாசம் நாடி ஜோதிடம் பார்க்க வைத்திஸ்வரன் போய்
இருந்தியே!! என்ன சொன்னாங்க……

அம்மா: கிழக்கு அல்லது வடக்கு திசையிலிருந்து பொன்னு
கிடைக்குமா…… அவங்களும் ஒரு வருஷத்தில கல்யாணம்
ஆகிடுன்னு சொல்றாங்க….

பையன்: அவன் சென்னையல பிரிய சுத்திகிட்டு இருக்கான்…. நீ தான்
அலைஞ்சு கிட்டு இருக்கா….

அம்மா: ஆமாம் பா!! அவன் ஜாலியாத இருக்கான்….. matrimony
போட்டாலும் இன்னும் சம்பளம் அதிகமாக
எதிர்ப்பார்க்கிறாங்க….. என்ன பண்றதுன்னு தெரியல

பையன்: அப்பா ….இருந்தா பிரச்சனையில்ல….. அவரும் கல்யாணம்
முடிவான உடனே சொல்லு வர்றேன் ,….சொல்லிடாரு.

அம்மா: அந்த மனுசன் !!! சிங்கப்பூர் இருந்துகிட்ட சொல்லிடுறாரு….
நான் அலையறது எனக்கு தான் தெரியும்…..

பையன்: நானும் ரொம்ப நாள சொல்லிகிட்டு இருக்கேன்…. ஜாதகம்
பார்க்காம கல்யாணம் பண்ணுன்னு நீ தான் கேட்க
மாட்டங்கிரா…..

அம்மா: ஆமாம் பா!! இது வரைக்கும் ஜாதகம் பார்க்கிறதுக்கு
மட்டுமே….. 20,000 ரூபாய்க்கு மேல செலவு பண்ணி
இருப்பேன்…… புரோக்கரும் 10,000 ரூபாய்க்கு மேல
வாங்கிட்டாரு பா!!!!

பையன்: நீ தான் கேட்க மாட்டங்கிர….. இப்ப உள்ள ஜோசியர்
எல்லா ஏமாத்திறாங்க!! ஒழுங்க சொல்றது இல்ல….
மறுபடியும் வந்த தானே அவனு பணம் சாம்பாதிக்க முடியும் ….
அதனால அப்படி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க…..

அம்மா: அப்படியா ….அப்படியெல்லாம பண்றாங்கஎன்னால நம்ப
முடியல..

பையன்: வர வர புரேக்கரும் …. நமக்கு ஒத்துவராத ஜாதகமும் தராங்க
அம்மாஅப்ப தானே அவனுக்கு காசு கிடைக்கும்

அம்மா: ஆமாம் ….பா…. புரோக்கரும் ….சம்பந்தமில்லாத ஜாதகம்
நிறைய கொடுக்கிறாரு ……..என்ன பண்றதுன்னு தெரியல
…. எனக்கு தான் ரொம்ப
டென்ஷனா இருக்கு ….. அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு
அடுத்து உனக்கு ஒரு கால்கட்டு போடணும்….

பையன்: அதுக்குல்லஎதுக்கு அம்மா அவசரப்படுறாமுதல்ல
அண்ணனுக்கு கல்யாணம் பண்ணு…. எனக்கு பொறுமையா
பார்த்துகலாம்….

அம்மா: இன்னும் ஜாதகமே புடிபடலஅதுக்கு அடுத்து, பெண் பார்க்க
போகணும்இன்னும் எவ்வளவு வேலை இருக்கு ….எனக்கு
நெனச்சாலே…. தலையை சுத்துற மாதிரி இருக்குது…..

பையன்: அதல்ல கவலைப்பாட்தேநான் தான் இருக்கேன்ல நான்
எல்லாத்தையும் பார்த்துகிறேன்…..நீ அண்ணி யாருன்னு
மட்டும் முடிவு பண்ணு
அப்புறம் எல்லாம் ஈசியா முடிச்சுடலாம்

அம்மா: இவனுக்கு பொன்னு பார்க்கிறதுக்கு மட்டுமே, 50,000 ரூபாய்
மேல ஆகிடும் போலஅது கூட பரவாயில்ல…. மனசுக்கு தான்
ரொம்ப கஷ்டமா இருக்குப்பா…. எதே கடவுள் புண்ணியத்துல
….நல்ல பொன்னா கிடைச்ச பரவாயில்ல….

பையன்: அதெல்லாம்அண்ணனோட நல்ல மனசுக்கு நல்ல
பொன்னு தான் கிடைக்கும்…. கவலைப்படாதே!!

அம்மா: ஒருத்தனுக்கே இப்படின்னு ….அடுத்து உன்னை நினைச்சா….
இப்பவே பயம் இருக்குப்பா..

பையன்: உங்க கிட்ட இதை பத்தி நானே பேசணும்ன்னு
நினைச்சிகிட்டு இருந்தேன்
..
அம்மா; என்னபா சொல்ன்னு நினைச்சுகிட்டு இருந்தா…. சொல்லுப்பா

பையன்: அது ஒண்ணும் இல்ல அம்மா…. இது மாதிரி கஷ்டப்பட்டு …..
அலைஞ்சு திரிஞ்சி பொண்ணு பார்க்கிற கஷ்டம் உங்களுக்கு
வேண்டாம்உங்க மருமகள ….நானே தேடி
கண்டுப்பிடிச்சுட்டேன் அம்மா….

(இதுக்கு அடுத்து நடக்கும்நிகழ்வுகளை ..உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment