இரண்டு நாளைக்கு முன் ரோட்டில் கண்ட காட்சி, சற்று என்னை நிலை தடுமாற வைத்து விட்டது. நான் கண்ணை கசக்கி, மறுபடியும் பார்த்த
போதும், அதே காட்சி தான். ஆம், நான் கண்ட காட்சி உண்மை
தான். பொய் பிம்பம் இல்லை என்பது தெரியவே, சில நொடி பொழுதுகள் தேவைப்பட்டது. ” நான் வேதாரண்யத்தில் தானே இருக்கிறேன், சென்னையில் இல்லையே??
” என்ற கேள்வியை, மனசாட்சி அதனிடமே கேள்வி கேட்டு கொண்டது.
அப்படி என்ன காட்சி……
ஒரு பெண், மோட்டர் பைக்கில் கால்
மேல் கால் போட்டு கொண்டு செல்கிறார்.. இந்த நிகழ்வை கண்ட உடன் உண்டான உள்ள குமுறலை
என்னால் இப்படி தான் விவரிக்க முடிகிறது. ”அந்த பொன்னு ….எப்படி போனா உனக்கென்ன ???? ….” என்ற உங்கள் மன மொழியையும்
என்னால் உணர முடிகிறது.
நாகரிக வளர்ச்சி என்ற வார்த்தைக்குள்ளே இதை அடக்கி விட முடியும். ஆனால், அதனுள் இருக்கும் சில
மருத்துவ பாதகங்களை விளக்க வேண்டி உள்ளது.
பெரும்பாலான மேடைகளில், விருந்தினர்கள் அனைவரும், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். வேஷ்டி
கட்டி இருந்தால் ,அப்படி உட்காருவது
கடினம். அதனால், பாதி பேர்
தப்பித்தார்கள். அப்படி உட்காரும் போது, முதுகு முள்ளெலும்பு வரிசையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அது போல், அப்படி உட்காரும் போது
நேராக உட்காருவது கொஞ்சம் கஷ்டமான விஷயம், இதனால், முதுகுவலி போன்ற
பிரச்சனைகள் எழலாம்.
இதைப்பற்றி ஹச். ஆர்(MBA- Human resource ) ஒருவரிடம் கேட்ட போது, கால் மேல் கால் போட்டு உட்காருவது நாகரித்தின் வெளிப்பாடு என்று சொன்னார்.
அதே சமயத்தில், கால் மேல் குதி கால்
படுமாறு உட்காருவதும் தப்பு என்று சொன்னார்.
இன்றையும் நிலையில்,
கீல்ஸ் செருப்பு
போடாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதனால் குதி கால் வலி வரும் என்று
சொன்னாலும், யாரும் தயார இல்லை.
மாடலிங் பண்ணுபவர்கள், தன்னுடைய உயரத்தை
அதிகரிக்கவும், மாடனாக நடக்கவும்
பயன்படுத்த ஆரம்பித்தது,
இன்று சாதாரண
பெண்மணியின் செருப்பாக மாறி விட்டது. முதுகு தண்டுவடத்தின் அமைப்பை மாற்றி, முதுகு வலியும் வரலாம்.
ஜீன்ஸ் பேண்ட் போட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம் என்றும், பேண்ட் பாக்கெட்டில், கனமான பர்ஸ் வைத்தால், அதுவும் முதுகு வலியை உண்டு பண்ணலாம் என்றும், நம்முடைய வெப்பநிலைக்கும் மது தேவையில்லாததும் என்றும், சொன்னால் யாரும் கேட்க
தயாரக இல்லை.
நாகரிகம் என்பது பண்பாட்டை அழிக்கிறது என்ற நிலை மாறி, உடல் நலனுக்கு பாதிப்பை
உண்டாகும் என்ற நிலை வந்த விட்டது. நாகரிகத்தை போன்றுவதற்கு முன்னால், உங்கள் உடல்நலனை போற்றுங்கள்!!!
அதுவே..உங்கள் நாகரிகத்தை வளர்க்கும்!!!
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment