Saturday, September 20, 2014

ஆணாதிக்கத்தின் வெளிப்பாடா?

சில தினங்களுக்கு முன் விபச்சார வழக்கில் பிரபல நடிகை கைது என்றும், அதனுடன் முக்கிய புள்ளிகளும் சிக்கினர் என்று செய்தி வந்தது.

பெரும்பாலும் விபச்சார வழக்கிலும், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படும் பெண்களை ஊடகங்களின் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வரவில்லை என்பது நடைமுறை. அது நியாயமான ஒன்று தான்.

இருந்த போதிலும், சில தினங்களுக்கு முன், ஸ்வேதா பாசு என்ற நடிகை தான் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் என்றும் செய்தி வெளியாகியது. இந்த செய்தியை ஊடகத்தில் முன்னிறத்த அவசியம் இல்லை.

நடிகை யார் என்று சொன்ன ஊடகம், அந்த முக்கிய புள்ளி யார் என்று வெளியிடவில்லை. சட்டத்தின் முன் தவறு செய்தவர்கள் இருவரும் தான். ஆனால் ஒருவர் மட்டும் குற்றம் செய்ததாக முன்னிறுத்தப்படுகிறார். அதன் ஏன்???

இன்னொரு செய்தியும் வெளியானது. சந்தர்ப்ப சூழ்நிலைகளினால், அந்த நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும், இதை போல், பல நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது பொதுவாக விபச்சார வழக்கில், கைதாவர்கள் சொல்லும் காரணம் தான் அது. நடிகைகள் இதை சொல்வது நகைப்புக்கு உரியது.


பொதுவாக விபச்சார வழக்கில் கைது செய்யப்படும் போது, பெண்கள் மட்டும் குற்றவாளிகள் போல் கருதப்படுவது நடைமுறையாக உள்ளது, அதன் பின் இருக்கும் புரோக்கர்களும், ஆண்களும் தவறு செய்யாதவரை போல கருதுவது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடோ என்னவோ!!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 

No comments:

Post a Comment