Saturday, September 20, 2014

ஆபாசத்தின் பின்புலம் என்ன??

நேற்று தீபிகா படுகோனொவின் சில அசிங்கமான படங்களை, டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. அந்த படங்கள், அனைத்தும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. ஆனாலும் தீபிகா கோபப்பட, நாளிதழும் உடனே அந்த படங்களை நீக்கி விட்டது. அனைத்தும் நடிகை, நடிகர்களும் அவருடைய தைரியத்தை பாராட்டினார்கள். பெண்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதா?? பெண்கள் என்றால் அவ்வளவு இலக்காரமா? …” என்று நாளிதழிடம் எதிர் கேள்விகளை தீபிகாவும், கேட்டிருந்தார்.

இந்த மாதிரியான புகைப்படங்கள், பத்திரிக்கைகளிலும் இணையங்களிலும் வருவது புதிதல்ல. பன்னொடு காலமாக நிகழ்ந்து வரும் நிகழ்வு தான். இதற்கு பத்திரிக்கைகளை குறை சொல்வதா? படிக்கும் பொது மக்களை குறை சொல்வதாஅப்படி உடை அணிந்து வரும் நடிகைகளை குறை சொல்வதா?? தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி கொள்கின்றனர்.

சினிமாவில் பெண்களை, பெரும்பாலும் கவர்ச்சி பொருளாகவே காட்டி வருகின்றனர். பெண்களை முன்னிறுத்தி வரும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஹாலிவுட்டில் இருந்த கவர்ச்சி, இன்றும் பாலிவுட்,கோலிவுட் வரை வந்துவிட்டது. படத்திற்கு, அந்த கவர்ச்சி தேவை……” என்று இயக்குனரும், “ படத்தில், அந்த காட்சிக்கும் கவர்ச்சி தேவையென்பதால் நடித்தேன்…” என்று நடிகைகளும் கூறி வருவதை பத்திரிக்கை செய்திகளை படித்திருப்போம்.

பொது விழாக்களுக்கு செல்லும் நடிகைகள், நாகரிக உடைகளை அணிகிறார்களா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அங்கு கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் என்ன? சினிமாவில்  காட்சிக்கு வேண்டும் என்றால், பொது இடத்தில் கவர்ச்சியின் தேவையின் காரணம் என்ன?? தன்னை கவர்ச்சியாக காட்டி கொண்டால் மட்டுமே, சினிமாத்துறையிலும், மக்கள் முன்னாலும் நிலைத்து நிற்க முடியும் என்று தவறான புரிதலை நடிகைகள் கொண்டுள்ளதாக எண்ணுகிறேன். அந்த புரிதலுக்கு, இந்த சமூகமும் பெரிய காரணம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. அதற்கான பதிலை எங்கே தேடுவது??

நடிகைகளின் சினிமா பயணம் என்பது, சுமார் பத்தாண்டு தண்டினால் கூட பெரிய விஷயமாக உள்ளது. அதுவும் கொஞ்சமாவது கவர்ச்சி இருந்ததால், சினிமாத்துறையில் நீடிக்க முடியும். அதுவும் சம்பளம் என்பது நடிகர்களோடு ஒப்பிடும் போது குறைவு. பெரிய நடிகைகளாக இருந்தவர்கள் பலர், பிற்காலங்களில் கஷடப்பட்டவர்கள் பலர். இந்த விஷயத்தில், ஆணாதிக்கம் இருப்பதை மறுக்க இயலாது. 

சினிமாவிற்கு என்று ஒரு பக்கம் செய்தி வெளியிடுவதை பத்திரிக்கைகள் வழக்கமாக கொண்டுள்ளன. வார பத்திரிக்கை பெரும்பாலும் சினிமாவை கொண்டு எழுதி வருகின்றன. அந்த பத்திரிக்கை வாங்கும் மக்களும், சினிமா செய்திகளை முதலில் படிக்கிறார்கள். அவர்களிடையே ஒரு மனக்களிப்பை ஏற்படுத்த, கவர்ச்சியான  அட்டை படங்களையும், வெளியிடுகின்றன. மக்கள் அதை தான் எதிர்பார்க்கிறார்கள்…”  என்று பத்திரிக்கைகளும், ”  அவர்கள் போடுவதால் தான் பார்க்கிறேன்..:வெகு ஜன மக்களும் சப்பு கட்டு கட்டிக் கொண்டிருக்கின்றன. 

பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்று பெரிதாக போற்றும் இந்தியாவில், ஆபாசங்களுக்கும் குறைவில்லை. இந்தியா திருநாட்டினையே, பெண்ணாக கருதும் குடிமகன்களும், ஆபாசத்தை ரசிக்கவே செய்கின்றனர். தாயாயையும் தங்கையையும் பெரிதாக எண்ணும் மனிதனே, பாலியல் வன்புணர்களுக்கும் காரணமாகிறான். இந்த வேறுபாடே கொஞ்சம் விசித்திரமானது தான். ஆனால், அது தான் உண்மை.

என்னடா, இவன் எதைப்பற்றி பேச ஆரம்பித்து, வேறு எதையே பேசிகிட்டு இருக்கானேன்னு நினைக்கலாம்.  இவையெல்லாம், வேறு வேறு பகுதியாக தோன்றினாலும், அவற்றில் அடிப்படையில் சில காரண ஒற்றுமைகள் இருக்கின்றன.

சினிமாவின் கவர்ச்சியையும், பத்திரிக்கை ஆபாசத்தையும், ஆணாதிக்க சமூகத்தையும், பெண்களின் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளையையும் விட்டு விட்டு, மேற்கண்ட விவாதத்தை முன்னிறுத்தி செல்வது, காரணம் தேடாத கேள்வியாகி விடும்.

சினிமாவில் தேவையற்ற கவர்ச்சியையும் ஆபாசத்தையும் குறைக்க வேண்டும். பத்திரிக்கை களும் தன்னுடைய கருத்து சுதந்திரத்தின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களும், பெண்களின் மீதான
பார்வையை மாற்றி தாயாகவும் உடன் பிறப்பாகவும் பார்க்க வேண்டும். ஆணாதிக்க மனநிலையை மாற்ற வேண்டும். பெண்களும் நாகரிகத்தின் அளவுகோலை புரிந்து கொள்ள வேண்டும். அரை குறை ஆடை, என்னுடைய சுதந்திரம் என்ற தவறான புரிதலை மாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கு மேலாக, சமூகத்தின் அனைத்து நிலைகளும் அனைத்து வயதினருக்கும், பாலியல் கல்வி அவசியம் கற்பிக்க வேண்டும்

சமூகத்தில் ஒவ்வொரு நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம். பத்திரிக்கை மட்டும் குறை சொல்வது, மேலோட்டமான முடிவே தவிர, முடிவான முடிவல்ல.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment