Saturday, September 20, 2014

என்னவளே அடி என்னவளே!!!

(அத்தை மகள் 12 வருடங்களுக்கு முன்னால், வெளிநாடு சென்று விட்டாள். இன்று அவள் தந்தையோடு விமானம் வந்து இறங்கிறாள். அந்த வருகையை பரிதவிப்போடு பார்த்திருக்கும் ஆடவனின் வரிகள் ….)

குறிஞ்சி பூவை போல் காத்திருக்கிறேன்
உன்னை காண
மணம் மண்ணில் கமழ
உந்தன் பரிசம் என்னை தவழ…..

பனிரெண்டு வருடங்கள் கூட
பஞ்சாய் பறந்தன
பரிதவிப்பு இல்லாமல்……
உந்தன் நினைவலையோடு….
யுகங்கள் கூட
நொடி பொழுதாய் சுற்றிற்று
போன நொடி வரை…….
இப்போது
யுக யுகமாய் சுழல்கிறது….
நியூட்டனின் விதி கூட புரிகிறது

பாவடை மறைத்த
கொலுசின்
மெல்லிசை கூட
இன்னும் மறையவில்லை
என்னிடமிருந்து….

குச்சி மிட்டாய்
சாப்பிட்ட இதழிலிருந்து
சாக்லேட் நீர் வழிந்த
முகம் கூட
இன்னும் மாறவில்லை
என் கண்ணிலிருந்து

உப்பு மூட்டை
சுமந்த வயதில் கூட
தடுக்கி விழுந்த போது
காயம் பட்ட கையில்
சிந்திய குருதிக்காக
விசும்பி அழுத
முகம் கூட
இன்னும் மறக்க நினைக்கவில்லை

நொண்டி விளையாட்டில்
நானும் நீயும்
மாறி மாறி
தொட்டு கொள்வோம்
இருவருக்கும்
கால் வலிக்க கூடாது என்பதற்காக…..

நினைவெல்லாம்
இனித்தாலும்…..
பிரிந்து சென்ற 
நொடி பொழுது மட்டும்
வேப்பங்பூவாய் கசத்தது……

கண்ணீர் சிந்திய கண்களையும்….
கை விரல்கள்
பிரிந்த பரிசங்களையும்….
நினைத்து
இன்று வரை
விம்புகிறேன்…..

மாடர்ன் மடந்தையாய்
வருவாய் என்றல்லவா
எண்ணி யிருந்தேன்!!!

உதட்டு சாயம் படிந்த
குறு புன்னகையோடு……
நாணம் பதிந்த
நடையோடு……
நெருப்பாய் ஒளி வீசும்
கண்களின் பார்வையை
என் மீதும்…….

உதடு அசையாமலே
உன் மனம்
என்னை ஆசையாய்
மச்சான் என்கிறது….
அதை இருவரும்
வெளிகாட்டி கொள்ளமலே
பகிர்ந்து கொள்கிறது………

எனக்கு பிடித்த
கத்திரி பூ நிற புடவையோடு
பவனி வந்து
உன் சம்பந்தத்தை
தெரிவித்ததை
என்னால் அறிய முடியாத என்ன!!!!
என்னவளே!!!!
அடி என்னவளே!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment