ஒருவன்
அனுபவசாலி, அறிவாளி என்று எவ்வாறு
தீர்மானிக்கப்படுகிறது????
அனுபவசாலி
பெரும்பாலும் வயதின் அடிப்படையிலும், அறிவாளி
படிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.ஆனால், இதை தாண்டி
ஒரு விஷயம் உள்ளது.
செய்கின்ற
செயலை பொறுத்தும், செயல்படுகின்ற சூழ்நிலையை பொறுத்து பல
நேரங்களில், அனுபவம், அறிவும் ஏற்ற
இறக்கங்களை சந்திக்கிறது.
திருமணம்
என்பதிலோ அல்லது கோவில் திருவிழா என்றலோ, அனுபசாலி
முன்னிறுத்தப்படுகிறான். அங்கு அறிவாளி ஓரம் கட்டப்படுகிறான். அலுவல் சார்ந்த
பணிகளில், அறிவாளி முன்னிறுத்தப்படுகிறான்.
ஒரு இடத்தில், பல பேர்கள் கூடி இருந்தால், அதில் யார் அதிகமாக படித்தவன் அல்லது
அனுபவம் உள்ளவன் மட்டுமே பெரிது படுத்தப்படுகிறான். அவன் வேறு இடத்தில்
செல்லுகையில், அவனை விட அதிக அறிவாளி அல்லது அனுபவசாலி
இருப்பானால், அவன் சிறுமைப்படுத்தப்படுகிறான். ஆசிரியர்
அனைவரும் அறிவாளிகள் தான். அதில் ஒன்றும் மாறுதல் இல்லை. ஆனால் தலைமை ஆசிரியரின்
முன்னால், அவர் சிறுமைப்படுத்துவதை போல...
அனுபவமும்
அறிவும், சூழ்நிலையால் மாறுவது தான் காலத்தின்
கொடுமை.
No comments:
Post a Comment