Sunday, September 7, 2014

சிவகாமியின் சபதம்

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் என்ற சரித்திர நாவலை நேற்று படித்து முடித்தேன். கடந்த நான்கு நாட்களில் படித்து முடித்தேன். இமை திறக்க மறுத்த கண்களோடு மனதில் ஏற்பட்ட பூரிப்பால் விடமுயற்சியோடு படித்து முடித்தேன். எனக்கு நாவல் மீது ஆர்வம் இல்லாத போது, கல்கியின் பொன்னியின் செல்வன் தான் ஆர்வத்தை ஊட்டியது.

சுமார் 7 நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு, சில புனை கதை மற்றும் கதாப்பத்திரங்களோடு பயணிக்க தொடங்கியது. முதலாம் மகேந்திர பல்லவன் காலத்தில் தொடங்கி, முதலாம் நரசிம்ம வர்மன் காலத்தில் முடிவடைகிறது.

பல்லவர்களின் காலத்தில் கட்டடக்கலை நன்கு வளர்ச்சி அடைந்தது என்றால் மிகையாது. அவ்வாறு கலைகளிலே பல காலம் செலவிட்டு அண்டை நாட்டுடன் நட்பு பாராட்டி கொண்டிருந்த வேளையில், வாதாபி மன்னன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்து வந்தான். அதில் தோற்று, பின்னர் வாதாபியின் மீது படையெடுத்து, நரசிம்ம வர்மனின் வெற்றியை, சில கற்பனைகளுடன் நன்றாக புனைந்துள்ளார்.

 நாவல் படித்த நான்கு நாட்களும் காஞ்சி நகரத்திலே வாழ்ந்தாகவே எண்ணுகிறேன். பல்லவனின் போர் களத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவனை போலவும், சிவகாமி- மாமல்லனின் ஊடல்களை அவர்களின் அனுமதியின்றி நான் ஒட்டு கேட்தாக எண்ணுகிறேன். சில சமயங்களில் நானும் ஒரு போர் வீரனாக வலம்  வந்து இருக்கலாம் என்று புயம் துடித்தது. அத்தனை நேர்த்தியான கதை அமைப்பும், இயற்கை வர்ணனையும் கதையை எடுத்து செல்லும் பாங்கும் மிகவும் நேர்த்தியானது. அத்தனையும் நாம் மன கண்களில் பட பிடிப்பது உண்மை.

வந்திய தேவனை, பொன்னியின் செல்வன் கதையில் பயன்படுத்தியது போல, புத்த பிக்குவை பயன்படுத்தி, நல்ல வகையில் கதையை நகர்வலம் செய்து இருக்கிறார். சிவகாமி நடனத்தையும்.,ஆயனரின் சிற்ப கலையும், மகேந்திர வர்மரின் ராஜ தந்திரமும் நம்மை வியக்க வைப்பதாக உள்ளது. பழங்காலங்களில் ஒற்றர்களின் பணி எத்தகையது என்று நன்கு புரிய வைக்கின்றன.

ராஜ குலத்தில், தன்னுடைய சுய வெறுப்புகளை தாண்டி, நாட்டிற்காக நிறைய தியாகங்களை செய்ய வேண்டி உள்ளது என்பதை நன்கு புரிய வைத்தது. அதை இப்போது உள்ள தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

இது மாதிரியான பழங்பெருங்கதைகளை படிக்காமல், “twinkle, twinkle…” என்று ரைம்ஸ் சொல்லி கொடுப்பதானால் தான், நம் பழம் பெருமைகளை தெரியாமல், வாழ்ந்து விட்டாமோ என்று எண்ண தோன்றுகிறதுஇதை இப்போதாவது படித்து தெரிந்து கொண்டது, பெரும் சந்தோஷம் தான்.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


   

No comments:

Post a Comment