இரண்டு
வருடத்திற்கு முன்னர்..... இந்தியன் பிரிமியன் லிக்கில், சென்னை மற்றும் ராஜஸ்தான்
அணிகளில் சூதாட்ட புகாரில் சிக்கியது.
இதனால் அவ்விரு அணிகளும் நீக்கப்பட்டன.
இது ஊரரறிந்த விஷயமே!!! இது உண்மையென்று வைத்து
கொள்வோம்!!!
சூதாட்ட
புகாரில் அணிகள், சிக்கினாலும், அணியில்
விளையாடிய வீரர்கள் யாரும் சூதாட்ட புகாரில்
ஈடுப்பட வில்லை என்று வைத்து
கொள்வோம்!?!?!?
உடனே, குஜராத் மற்றும் புனே
அணிகள் என இரு அணிகள்
உருவாக்கப்பட்டு, சென்னை மற்றும் ராஜஸ்தான்
அணிகளிலிருந்து வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது.. ரொம்ப
நியாதஸ்கர்களாம்!!! நம்பிட்டோம்!!!
மறுபடியும்,
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை மற்றும்
ராஜஸ்தான் அணிகள் சேர்க்கப்படுகின்றன. மேலும்
பழைய அணி வீரர்களை தக்க
வைத்து கொள்ள விதிகளும் தளர்த்தப்படுகின்றன!!!
என்னப்பா நடக்குது இங்க???
எத்தனை
விதி மீறல்கள்!!! மக்கள்/ரசிகர்கள் முட்டாள்கள்
என்று பிசிசிஐ நினைத்து விட்டதா?!?!?.
சற்று ஆழமாய் யோசித்து பார்த்தால்,
பிசிசிஐ நினைப்பது கூட சரிதான் என்று
தோன்றுகிறது. நம்மவர்களும் இப்படி தானே இருக்கிறது.
அடுத்து சென்னையில் நடக்க இருக்கிற போட்டியில்
கூட்டத்தினை பார்த்தால் தெரிந்து விடும்!!! இவர்களின் லெட்சணத்தை!!!
பெண்கள்
நெடுந்தொடர்களை பார்த்து ,கெட்டு போகிறது என்று
பாடமெடுக்கும் ஆண் சமூகமே, இதற்கு
என்ன சொல்ல போகிறீர்கள்!!!
இந்தியாவின்
உச்சப்பட்ச பதவியான குடியரசு தலைவரினை
விட அதிகமான சம்பளம் வாங்கிறார்கள்.
கோடிகளில் புரள்கிறார்கள்!!!!
“ திறமை
இருக்கு” என்று கம்பு சுத்த
ஆரம்பித்து விடாதீர்கள். பெண்கள் கிரிக்கெட்டிற்கே, இதில்
கால்வாசி கூட கொடுக்கப்படுவதில்லை என்பதே
அவலம்!!!
100 ரன்
எடுத்து விட்டால், ரசிகனுடைய வீட்டில் பாலாறும் தேனாறும் ஒடும் என்று நினைத்து
கொள்கிறான். (அரசியல் வாதியை போல!!!)
. ஒரு கிரிக்கெட் வீரருக்கு ரசிகனாக இருப்பதில்லை தவறு
எதும் இல்லை!!! ஆனால், அவன் என்ன
செய்தாலும் தலையாட்டி கொள்ளும் வெறியானாக இருக்க கூடாது என்பதே
என் கூற்று!!!
ரஜினியின்
ஆன்மிக அரசியல் போல் அல்லாமல்
, கிரிக்கெட்டின் வணிக அரசியலை, குறைந்து
பட்சமாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment