National
medical Commission ல் bridge course பற்றி தகவல் வந்ததிலிருந்து, சமூக வலைதளங்கள்
கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. NMC மசோதாவில், பகுதி 49 ல் bridge course
பற்றி கூறப்பட்டுள்ளது. அதிலும் தெளிவான வரைமுறைகள் கூட கொடுப்படவில்லை.
வருடத்திற்கு ஒரு
முறை National medical Commission மற்றும் CCIM ஆகிய இரண்டும் சேர்ந்து, bridge
course பற்றி விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
bridge course
பற்றி வரையறைகளே, தெளிவாக தெரியாத போது, அதை பற்றி எவ்வாறு கருத்து கூறுவதென்று தெரியவில்லை.
அது நன்மையா?? அல்லது தீமையா? என்ற கருத்தெல்லாம், முழு வரையறைக்கு பின்னரே தெரிவிக்க
இயலும்.
இந்திய மருத்துவ
முறையிற்கு, தனியாக கமிஷன் அமைக்கப்படும் என்று நினைக்கிறேன். அந்த மசோதா வந்த பிறகு,
நிறைய பேசலாம்.
இம்மசோதாவில் உள்ள
மருத்துவ நுழைவு தேர்வு, பயிற்சி செய்ய நுழைவு தேர்வு, மத்திய –மாநில உறவுகளில் ஏற்படும்
பாதிப்புகள், மருத்துவ பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைப்பு, மத்திய அரசின் நேரடியான பிரதிநிதிகள்
நியமனம் போன்றவற்றை பற்றி விவாதங்கள் நடந்தால் சந்தோஷம்!!! அதை விடுத்து…..
இதற்கு கூட, சித்த
மருத்துவத்திற்கு எதிரானவன் என்று முத்திரை குத்தி விடுவார்களே!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment