////கடந்த ஆண்டை
காட்டிலும் இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு வாசகர்கள் அதிக வரவேற்பு அளித்துள்ளனர்.
சுமார் 15 லட்சம் பேர் புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் 6 லட்சம் பேர்
குழந்தைகள், மாணவர்கள் ஆவார்கள். சராசரியாக கண்காட்சியில் 13 லட்சம் புத்தகங்கள் விற்றுள்ளது.
ரூ.15 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.10 கோடி அளவுக்கு
விற்பனை நடந்தது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது- பத்திரிக்கை செய்தி//////
ஒரு புத்தக வாசிப்பவனாக,
மேற்கண்ட செய்தி பார்த்தவுடன், உடல் மெய் சிலிரித்து போய் விட்டது. மனம் பரவச நிலைக்கு
சென்று விட்டது. புத்தக கண்காட்சி செல்லாமல், தவறு செய்து விட்டோமோ??? என்று எண்ண தோன்றுகிறது.
ஆனால், மூளை கசக்கி
பிழிந்து காய போட்டு யோசித்தால், சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது. புத்தக படிப்பவன், புத்திசாலி/அறிவாளி
என்ற பொதுபுத்தியில் யோசித்தால், சற்று நகைச்சுவையாகவே தோன்றுகிறது.
சென்னை மட்டுமல்ல,
தமிழகத்தின் பல பகுதிகளிலும், புத்தக கண்காட்சிகள் நடைபெற்று தான் வருகிறது. எப்படி
கணக்கிட்டாலும், மாத மாதம் எதாவது ஊரில் புத்தக கண்காட்சி இருக்கும். குறைந்தபட்சமாக,
வருடத்திற்கு 20 லட்சம் புத்தகங்கள் விற்பனை வாய்ப்புகள் உண்டு. அதில் எப்படியும்
10 லட்சம் பேராவது புத்தகம் வாசிப்பார்கள் என்றால், தமிழர்கள் ஏன் வாழ்வியல் ரீதியாக/அறிவு
சார்ந்து முன்னேறவில்லை????
”
தமிழன் அறிவு சார்ந்து முன்னேறி விட்டான் “ என்று சண்டையெல்லாம் போட வர வேண்டாம். தொழிற்நுட்ப
சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் வளர்த்திருப்பது போன்று தோற்றமளித்தாலும், அறிவு
தளத்தில் இன்னும் கடக்க வேண்டிய தூரங்கள் ஏராளம்.
தமிழ்கத்தில் வெளிவரும்
புத்தகங்களில், 60-70 சதவீதத்திற்கு மேல், புனைவு சார்ந்தவையே!!! அதாவது சிறுகதை, நாவல்,
கவிதை. அபுனைவு சார்ந்த நூல்கள் என்பது மிக குறைவு. அபுனைவு நூல்களின் எண்ணிக்கை அதிகமாகும்
போதும், அதற்கான வாசகர்கள் அதிகமாகும் போது, தமிழகமும் அறிவு சார்ந்து முன்னேறும் என்பதில்
ஐயமில்லை!!!
நானும், அதிகமாக
புத்தகம் வாசிப்பவன் தான்!!! அதற்காக, என்னை அறிவாளி என்று நீங்கள் நினைத்தால், கொஞ்சம்
கஷ்டம் தான்!!!!
அறிவாளிகளில் அதிக
பேர் புத்தகம் வாசிப்பவர்களே!!! ஆனால், புத்தகம் வாசிப்பவர்கள் அனைவரும் அறிவாளிகள்
அல்லர்!!! எந்த புரட்சியையும் ஏற்படுத்தாத, எந்த எழுத்தும்/புத்தகமும் (மன)குப்பையில்
இடப்பட வேண்டியவையே!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment