இந்தியா
போன்ற பிற்போக்கு சமூகங்களில் உள்ள பிரச்சனைகள் ஏராளம்!!!
அதில் ஒன்று திறமையை அங்கீகாரம்
செய்தல்!!! ஒருவன் திறமையானவன் என்ற
அங்கீகாரத்தை, ஏதேனும் ஒரு புள்ளியில்
சமூகம் முன்னிறுத்துகிறது. அத்திறமையை, எந்தவித கேள்விக்கு உட்படுத்தப்பாடமல்
மற்றையை அமைப்புகளாலும் எடுத்து கொள்ளப்படுகிறது.
ஒரு வகுப்பில் பல திறமையாளர்கள் இருப்பார்கள்.
ஆனால், நன்றாக மானப்பாடம் திறமையும்,
அழகான எழுத்து திறனும் மிக்க
ஒருவரை திறமையானவன் என்ற அங்கீகாரத்தோடு பள்ளி
வெளியே அனுப்புகிறது. அதே வகுப்பில், சதுரங்கம்
விளையாட்டில் திறமையாக உள்ள ஒருவரை, நாம்
அங்கீகாரம் செய்வதே இல்லை.
பொது சமூகம் சிலவற்றை திறமை
என்று அங்கீகாரம் செய்துள்ளது. அதை தவிர்த்து பிறவற்றை
கண்டு கொள்வதில்லை. இவையெல்லாம், இந்திய போன்ற வளரும்
நாடுகளில் உள்ள முக்கியமான சமூக
பிரச்சனை!!
இவ்வாறாக
திறமையிருந்து அங்கீகாரம் கிடைக்காத நபர்கள், மனதளவில் பலவீனமடைந்து, பொது சமூகத்திற்கு செய்ய
வேண்டிய கடமைகளை தவிர்க்க ஆரம்பிக்கின்றனர்.
மாறாக, பொது சமூகத்தினால், அங்கீகாரம்
செய்யப்பட்ட திறமைகளை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.
இதனால், சமூகம், நல்ல திறமையாளர்களை
இழந்து தவிக்க ஆரம்பித்து விடுகிறது.
சிறு வயதிலேயே நல்ல நீச்சல் வீரராக
அறியப்பட்ட குற்றாலிஸ்வரன், இன்று தொழிற்நுட்ப துறையில்
பணிபுரிந்து வருகிறார். இதே ஐரோப்பா போன்ற
மேலைநாடுகளில் பிறந்திருந்தால், இன்று மிகப்பெரிய நீச்சல்
வீரராக அறியப்படுவார். மேலைநாடுகளின் அத்தனை பண்புகளை பின்பற்ற
துடிக்கும், இந்திய சமூகம், பகுத்தறிவை
உபயோகம் செய்வதில்லை.
கிரிக்கெட்டில்,
ஒரு போட்டியில் இரட்டை சதம் அடித்து
விட்டால் போதும்!! அந்த கிரிக்கெட் வீரரை,
நன்றாக விளையாட விட்டாலும், பல
போட்டிகளில் நிலைத்திருப்பார். நம்முடைய டிசைன் அப்படி!!!
சி என் ராவ் அவர்கள்,
பாரத் ரத்னா விருது பெற்ற
பிறகு, அவரை யாரென்று தெரிய
ஆரம்பித்தது. கைலாஷ் சத்யார்த்தியின் கதையும்
அப்படி தான்!!! இந்த தேடலில்
நானும் விதிவிலக்கல்ல!!!
இன்றைய
சூழ்நிலையில், கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர்,
அரசியல் வாதி ஆகியோரை மிகச்சிறந்த
திறமையாளர்களாக, இந்திய பொது சமூகம்
வகுத்துள்ளது.
சமையல்
துறையிலும் ,மிக சிறந்த வல்லுநர்கள்
உண்டு!!! ஏன் தார் சாலை
போடும் தொழிலாளர்களிலும் நேர்த்தியானவர்கள் உண்டு!!! இன்னும் சொல்ல போனால்,
கழிவுகளை தூய்மை செய்வதிலும் வல்லவர்கள்
உண்டு !!! ஆனால், இங்கு மருத்துவர்கள்,
அரசு அதிகாரிகள் மற்றும் பொறியியல் வல்லுநர்களை
மட்டும் திறமையானவர்களாக அடையாளம் காண்கிறேன். அனைத்தும் துறையிலும் வல்லுநர்கள் அங்கீகாரம் செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக,
கைதட்டலாக கூட இருக்கலாம்.
இதை தாண்டி, இன்னொரு பிரச்சனையும்
பொது தளத்தில் உண்டு!!! ஒரு துறையில், பல
பேர்கள் திறமையாளர்களாக இருப்பர். கால ஒட்டத்தில், ஒருவர்
மட்டும், திறமையாளராக அறியப்படுவர்!!! “ யார் ஒருவருக்கு, திறமையை
பொதுயுலகத்திற்கு வெளிக்கொணர தெரிகிறதோ, அவரையே திறமையானவன்” என்று
பொது சமூகம் ஒத்து கொள்ளும்.
தனது திறமையை, வெளிப்படுத்த இயலாத மனிதனை, எளிதாக
புறக்கணிக்கும். இத்தகைய புறக்கணிப்பு, சமூக
வளர்ச்சியின் மோசமாக நிலையையே எடுத்து
காட்டுகிறது.
ஒரு மனிதனின் திறமையை, பொது சமூகம் சொல்வதை
அப்படியே ஒத்து கொள்ளாமல், நமது
பகுத்தறிவை பயன்படுத்தி ஆராய்வது முக்கியம்!!!
இதில் ஆச்சரியமாக விஷயம் என்னவென்றால், இதை
புலப்படுத்த வேண்டிய ஆசிரிய சமூகமே,
பகுத்தறிவற்று இருப்பதே அவலத்தின் உச்சம்!!!
உண்மையான
திறமையை அங்கீகாரம் செய்யுங்கள்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment