பொருள்,
பணம், தங்கம், நிலம் போன்றவற்றை
முக்கியமான மூலதனங்களாக, நாம் எண்ணி கொண்டிருக்கிறோம்!!!
அதனை தாண்டிய முக்கியமான மூலதனம்,
மனித சக்தி/ ஆற்றல். அதனால்
தான், இந்தியாவை பார்த்து முன்னேறிய நாடுகளும் பொறாமை கொள்கின்றன. இந்தியா
2020 ல் வல்லரசாகும் என்று அப்துல் கலாம்
சொல்லியிருந்தார்.
பணத்தை
கடனாக பெற்று கூட, தொழில்
தொடங்க முடியும். ஆனால், தொழிலுக்காக மனித
ஆற்றல் உருவாக்க, குறைந்தபட்சமாக 18- 20 ஆண்டுகள் காத்திருங்க வேண்டும்.
பெரும்பாலும்,
20-60 வயது வரை, உற்பத்தி செய்ய
கூடிய வயதாக கருத இயலும்.
அதாவது நாட்டிற்கும்/வீட்டிற்கும் தேவையான முழுமையான உழைப்பினை
தர முடியும். மேற்கத்திய நாடுகளில், பிறப்பு விகிதம் குறைந்து,
வயதானர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனா, ஜப்பான் போன்ற
நாடுகளில் இப்பிரச்சனையின் தன்மை விஸ்வருபம் எடுத்துள்ளது.
ஆனால்,
இந்திய மக்களின் சராசரி வயது 30 க்கு
குறைவாகவே உள்ளது. இந்த இளைஞர்களுக்கு
சிறப்பான வேலைவாய்ப்பினை அளிக்கவில்லையென்றால், சமூக பிரச்சனைகளை அதிகமாகவும்
வாய்ப்புள்ளது என்பதும் நிதர்சனம்.
மேலை நாடுகளில் மனித ஆற்றல் குறைவாக
இருப்பதால் தான், இந்திய நாட்டின்
மனித ஆற்றல்/சக்தியை நாடி
வருகின்றன. ஆனாலும், நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
எ.கா. அமெரிக்கா
நாடு, இந்திய மனித ஆற்றலை
அதிகம் உபயோகித்து வந்தது. அமெரிக்கர்களுக்கு வேலை
வாய்ப்பு குறைய ஆரம்பிக்க, H1B விசாவில்
நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இன்றைய
இளைஞர்கள்,இத்தகைய உண்மையான மனித
ஆற்றலை புரிந்து கொள்வதில்லை. எதிலும் அவசரம்; யோசித்து
முடிவெடுப்பதில்லை; பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்பதில்லை; இதனால், பல இளம்
மனித உயிர்கள் /ஆற்றலை இழக்கிறோம்.
நேற்று
வேதாரண்யம் ஆறுகாட்டு துறை பகுதியை சேர்ந்த
5 இளைஞர்களின் இழப்பு, இதன் தொடர்ச்சியே!!!
அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி
கொள்கிறேன். குடும்பத்திற்கு அனுதாபங்கள்!!!
செல்பி
எடுக்கும் போது உயிரிழப்பு, ஆறு,
குளம் மற்றும் கடல்களில் ஏற்படும்
உயிரிழப்பு, பைக்கில் செல்லும் போது ஏற்படும் உயிரிழப்பு…..
இப்படியாக பட்டியல் நீளும். தற்சமயத்தில், பெரும்பாலான
பெற்றொர்கள், ஒரு குழந்தையே போதும்
என்று முடிவெடுத்து விடுகிறார்கள். அத்தகைய குடும்பங்களில், இளம்
தளிர்களின் உயிரிழப்பு, குடும்பத்தையே நிலை குலைய செய்து
விடுகிறது.
இந்திய
சமூகம், மனித ஆற்றலை அதிகம்
பெற்று விட்டதாலோ என்னவோ, மனித ஆற்றலை
புரிந்து கொள்ளவே இல்லை!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment