இந்தியனாய்,
இந்தியாவை ஆள்வதற்கு அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து, அதனை நடைமுறைப்படுத்திய நாளை,
இத்தருணத்தில் நினைவு கூறுவதில் பெருமை
கொள்கிறேன்!!!
இந்தியனின்
தலைமைப்பண்பு மீது, மேற்கத்திய உலகத்திற்கு
இருந்த ஏளனப்பார்வை இன்று வரை மாறியதாக
தெரியவில்லை. இதே மாதிரியான கேள்வியும்
சுதந்திர வேட்டை தருணத்தில் இந்தியாவின்
மீதும் வைக்கப்பட்டது. 1920-30 வாக்கில், அதற்கான பதிலடியும் இந்தியாவிலிருந்து
அளிக்கப்பட்டது.
நம்மை....
நாமே ஆள்வதற்கான அரசியலமைப்பு சட்டத்தினை வடிவமைப்பதற்கு சுமார் 3 வருடங்கள் ஆகின. பல்வேறு நாடுகளிலிருந்து
எடுக்கப்பட்டது என்ற விமர்சனம் இருந்தாலும்,
பல்வேறு இனம், மொழி, மதம்,
கலாச்சாரம் உள்ள மண்ணை சட்டத்தின்
வயிலாக கட்டமைப்பது என்பது எளிதான செயலன்று!!!
காலத்திற்கு
ஏற்ப மாற்றங்களை அரசியலமைப்பு சட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்
என்ற நிகழ்கால உண்மையையும் மறுக்க இயலாது!!!
இத்தருணத்தில்,
இரு விஷயங்களை முக்கியமாக கருதுகிறேன்.
1. சாதி,சமய, அரசியல் சார்பற்ற
மற்றும் நேர்மையான மக்கள் பிரிதிநிதிகளை தேர்ந்தெடுக்க
வேண்டும்.
2. மற்றவர்கள்
தவறு பண்ணுகிறார்கள் என்பதற்காக, நாமும் தவறு செய்ய
வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உங்களுடைய பணியை சிறப்பாகவும், நேர்மையாகவும்
சிறப்பாக செய்தாலே போதும்.
சமூக மாற்றம் என்பது தனிமனித
ஒழுக்கம் மற்றும் தனிமனித மாற்றங்களால்
மட்டுமே வெற்றியடைய முடியும்.
நண்பர்களுக்கு.....
இனிய குடியரசு தின வாழ்த்துகள்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment