Saturday, October 25, 2014

தீபாவளி திருநாள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு தீபாவளியும் வந்து விட்டது. தீபாவளிக்கு புதன் கிழமை மட்டும் தான் விடுமுறை இருக்கும் என்று வருத்தப்பட்ட மாணவர்களுக்கு, மழை அதிகமான விடுமுறை தந்து இருக்கிறது. அம்மாவின் விடுதலையும் அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை தந்து இருக்கும். அரசு ஊழியர்களுக்கும், 7 சதவீத அகவிலைப்படி உயர்வு, போன வாரம் தான் அறிவிக்கப்பட்டது. இப்படியாக,. அனைவருக்கும் இந்த தீபாவளி சந்தோஷமாக அமைந்துள்ளது.

ஆனால் வியபாரிகள், மழையினால் சற்று பாதிப்பட்டுள்ளனர். அதிலும் வெடி விற்பனை செய்பவர்களுக்கு கொஞ்சம் பாதிப்பு அதிகம்.

நரசுரனை கொன்ற தினத்தை, தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்கிறது புராண வரலாறு. ராமன் வனவாசம் முடிந்து, நாடு திரும்புகையில் தீபம் ஏற்றி விளக்கேற்றினர் என்பது மற்றொரு வரலாறு எது எப்படியோ, நமக்கு ஸ்விட் கொடுத்தா…. சரி…….

தீபாவளி என்றவுடன் சற்றொன்று நினைவில் வருவது மூன்று விஷயங்கள். புதுத்துணி, இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு வகைகள். இவற்றில், எது குறைந்தாலும் நம் மனம் மகிழ்ச்சி கொள்ளாது.

பத்து வருடத்திற்கு முன்னர் , பெரும்பாலும் புது புதிதாக துணிகள் எடுப்பது என்பது, பெரும்பாலும் தீபாவளி திருநாளிற்கே இருக்கும். அதை அடுத்த நாள், பள்ளிக்கு போட்டுகிட்டு போய், “ இது தான்  என்னுடைய தீபாவளி ட்ரெஸ் என்று தற்பெருமை கொள்ளும் சந்தோஷமான தருணங்கள், இன்னும் மறக்க இயலவில்லை. உன்னோடு எவ்வளவுடாஎன்னோடது இவ்வளவு டா…..” என்பதும், அதில் நம்முடைய துணியின் விலை அதிகமாக இருந்தால், காலரை தூக்கி விட்டு நடப்பதும் நெஞ்சில் நிற்கும் தருணங்கள்.. அதெல்லாம், இப்போது இருக்கிறதா? என்று தெரியவில்லை. இன்றெல்லாம், நினைத்து உடனே, ஷாப்பிங் கிளம்பி போய், ட்ரெஸ் எடுத்து விடலாமே!!!! இதனால், தீபாவளிக்கு எடுக்கப்படும் , புதுத்துணியின் மீதான நிச்சயம் ஆர்வம் குறைந்து விடும்.

 முருக்கு, அதிரேசம், கெட்டி உருண்டை, வடை என்று பலவகையான ஸ்விட் வகைகளை நினைக்கும் போது, நாக்கில் எச்சில் ஊரும். முன்பெல்லாம், பத்து நாளைக்கு முன்பே, அதற்கான பொருட்களை வாங்கி, மிஷினில் அரைத்து, ஐந்து நாட்களுக்குள் பலகாரங்களை சுட ஆரம்பித்து விடுகிறார்கள். அது ஒரு திருவிழா கோலம் தான். ஆனால், இப்போது சுவீட் கடையில் தான் கூட்டத்தை  பார்க்க முடிகிறது. சுவையாக செய்யக்கூடிய பக்குவம் வராத தாலும், அதற்கான நேரம் செலவு செய்யவும் யாரும் தயாராக இல்லை. காசு இருந்தால், எந்த வித பலகாரமும் எளிதாக வாங்கி விடலாம்.

தீபாவளி என்றால், என்றுமே மாறாமல் இருப்பது என்றால் பட்டாசு மட்டுமே. வெடியின் வகைகள் அதிகரித்து விட்டதால், பிள்ளைகளுக்கு சந்தோஷத்திற்கு குறைவில்லை.

அமைதிக்கான நோபல் பெற்ற கைலாஷ், ஒரு கருத்தை முன் வைத்தார். வெடி தயாரித்தலில் குழந்தை தொழிலாளர்கள்  பயன்படுத்தப்படுகின்றார்கள். எனவே, வெடிப்பதை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதோ போல்வெடிப்பதினால் காற்று மாசுப்படுகிறது என்ற கருத்தும் சமூக ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகிறது. தீயனைப்பு துறையினரும், பாதுகாப்புக்காக வெடிக்க உபயோகம் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இதையெல்லாம், மனதில் கொண்டு, பாதுகாப்பாக வெடி வெடிப்பது நல்லது.

ஒவ்வொரு டிவியிலும், எத்தனை படம் போடுறாங்கஎப்படி எல்லாவற்றையும் ஒண்ண பார்க்க முடியும் …… இதுக்கு முதல்ல ஒரு முடிவு கட்டணும்

அதே மாதிரி தீபாவளி அன்றைக்கு போன, நிறைய ஸ்விட் கொடுப்பாங்க… .ஆனால், நம்மள சாப்பிட முடியாது…. ஒரு மாசம் கழித்து போனஎதுவும் இருக்காது…. இன்னுமே, தீபாவளி ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மாதம் மாத்தி வைச்சுடுவோமா?????

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment