Saturday, October 25, 2014

ஏசுதாஸின் பேச்சும் ஆணாதிக்கமும்

பாடகர் யேசுதாஸ்,” ஜீன்ஸ் பேண்ட் பெண்கள் அணிந்து மற்றவரை தவறான பாதையில் அழைத்து செல்லாதீர்கள் என்று ஒரு விழாவில் தெரிவித்து இருந்தார். இதற்கு பல எதிர்ப்புகள் பல்வேறு இடங்களிலிருந்து வந்த வண்ணம் உள்ளது.

அவரை உங்கள் அண்ணாகவும் அப்பாகவும் நினைத்து ஏற்று கொள்ளுங்கள் என்று சிலர் கூறுகின்றனர். அவர் ஒரு பாடகர். அவருக்கு சமூகம் சார்ந்த விஷயங்கள் பற்றிய புரிதல் கிடையாது. எனவே அவருடைய பேச்சை கண்டு கொள்ள அவசியமில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜீன்ஸ் பேண்ட் பெண்கள் அணிவதால் மட்டும், பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்றும், ஆண்களுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டுகிறது என்பதை ஒத்து கொள்ள இயலவில்லை.  ஆடை குறைப்பு விஷயத்தில், பெண்கள் நிறையவே கவனம் செலுத்த வேண்டி உள்ளது என்பது உண்மை. அதிக அளவு ஆடை சுகந்திரம் என்பது ஆண்களுக்கு பாலியல் உணர்வை துண்ட வாய்ப்புண்டு.

இதில் இன்னொரு விஷயத்தினை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இப்படியாக ஆடை கலச்சாரங்கள், இந்தியாவில் உட்புகுந்தது என்னவோ, சுமார் 20-30 ஆண்டுகளுக்கு நடந்த சமூக மாற்றம் தான். அதற்கு முன்னர், இப்படியான பெரிய ஆடை மாற்றம் ஏற்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல், ஆடையை பண்பாட்டோடு சேர்த்து பழகியவர்கள் இந்தியர்கள். அதனால், நாகரீக உடை மாற்றங்கள், நம் பண்பாட்டை அழித்து விடுமோ என்ற பயம் நியாயமானது தான்.

நாகரீக உடையின் மாற்றங்கள், இந்த கால மக்கள் நிறையவே ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனால், கலச்சாரத்தை பெரிதும் மதிக்கும் பெரியவர்கள் இதை ஏற்று கொள்ள இயலவில்லை.
இந்தியாவில் பன்னொடும் காலமாக, தந்தை வழி சமூகமாகவே வந்துள்ளது. இந்த சமூக நிலை இயற்கையாகவே, ஆணாதிக்க சமூகமாகவே வளர்ந்துள்ளது. அந்த நிலை பாலியல் எண்ணங்களை கூட ஆண்கள், எளிதாக வெளிப்படுத்த கூடியாத மனிதர்களாக காணப்படுகின்றனர். அதே சமயத்தில், பெண்களின் பாலியல் எண்ணங்கள், பெரும்பாலும் மறுக்கப்பட்டே வந்துள்ளது.

பெண்களிடத்து சமூக விழப்புணர்வு ஏற்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சம உரிமை கிடைக்க ஆரம்பித்த பின்பு தான், ஆண்-பெண் என்ற சமநிலை பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. அத்தகைய சமூக மாற்றம், உடனே நடந்து விட கூடியது அல்ல. பல வருடங்கள் கூட ஆகலாம். அதே போல், ஆண்கள் ஆளும் சமூகமாக இருந்து விட்டு, தீடீரென சம நிலை என்ற பண்பாட்டை ஏற்று கொள்ளுவதற்கு சற்று காலங்கள் ஆகலாம்.

சற்று வயதானவர்களிடம் இந்த மாற்றம் எளிதாக ஏற்பட்டு விடாது. ஆனால், இளைஞர்களிடம் எளிதாக ஏற்பட்டு விடும். இருந்தாலும், ஆண்-பெண் சம நிலை ஏற்பட நூற்றாண்டுகள் கூட ஆகலாம். அதை பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆடை குறைப்பு மட்டுமே பெண் சுதந்திரம் என்பதை ஏற்று கொள்ள இயலாது. கல்வி, வேலைவாய்ப்பு, சமூக சேவை, எழுத்து பணி, சினிமா என்று எல்லா நிலைகளிலும் தாங்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

பெண் சுதந்திரம் பேசுபவர்கள், சினிமாவின் ஆடை பற்றிய  சுதந்திரத்தையும் கொஞ்சம் கவனிக்க வேண்டி உள்ளது.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment