Monday, October 6, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

தன்னை தினமும் அதிகமாக பார்ப்பதாக, தற்பெருமை கொண்டது கண்ணாடி. அப்போது கடவுள், “ உன்னை தினமும் பார்ப்பதற்கு, உன் எதிரொலிப்பு தன்மை காரணமல்ல, உன் பின்னால் பூசி இருக்கும் ரசம் தாம் காரணம், அதற்காக நீ தற்பெருமை கொள்ளாதே!என்று சொன்னார். இது கண்ணாடி மட்டுமல்ல. ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் பொருந்தும்.

தன்னை தூக்கி விட்ட தோள்களையும், தன்னை ஏற்றி விட்ட ஏணிகளையும் கூட திரும்பி பார்க்காமல், தள்ளி விட்டவர்களும் தூரத்தி விட்டவர்களும் இங்கு அதிகம். கீழே விழுந்தால் வலியும் வேதனையும் உங்களுக்கும் தான் அதிகம். சென்ற உயரம் அதிகமானால், வீழ்ந்த உயரமும் சற்று அதிகமாகத்தானே இருக்கும்.

தன்னுடைய வெற்றிக்கு தான் மட்டும் காரணம் என்று நினைத்து கொள்ளுபவர்களோ அதிகம். ஏனனெனில் தூக்கி விட்ட தோள்களையும், ஏணிகளையும் மறந்து/மறுத்த விட்டது தான் காரணம்.

உங்களின் வெற்றிக்கு பின்னால் இருப்பவர்களை ஆராதிக்க கூட வேண்டாம். தட்டி விடாமல் இருந்தாலே போதும்!!!! 

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment