தனது தாய், தந்தையைப்
போலவே சமூக வரையறைக்குள் சிக்க விரும்பவில்லை என்றும், திருமணத்திற்கு
முன்னதாகவே குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை
ஸ்ருதிஹாசன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னால், தனியார்
தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது இதை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பாக பலரும், ஆதரவாக
சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது, “ அவருடைய தனி மனித சுதந்தரம் ” என்பது
உண்மை. இதில் யாருக்கு மாற்று கருத்து
இருக்க வாய்ப்பில்லை. அதனால், அவருடைய கருத்திற்கு விமர்சனம் செய்ய கூடாது என்று சில
முற்போக்கிவாதிகள் சொல்கிறார்கள்.
பக்கத்து வீட்டு முனியம்மாவோ அல்லது எதிர் வீட்டு
காந்தியம்மாவோ சொல்லியிருந்தால், யாரும் ஒன்றும் பேச போவதில்லை. ஆனால், தன்னை
நாத்திகனாக காட்டி கொள்ளும், உலக நாயகனின் மகள் அல்லவா தங்கள். அப்படி இருக்கும் போது, ஸ்ருதி
காசனின் பேச்சு, சமூகத்தில் சிறிய அளவேனும் பாதிப்பை ஏற்படுத்த தானே
செய்யும்.
தமிழ் சினிமாவின் காதநாயகன் மற்றும் காதநாயகிகளை
தன்னுடைய வாழ்வின் ரோல் மாடல்களாக கொண்டு வாழ்பவர்கள் தமிழர்கள். இல்லெயென்றால், அவர்களை
போலவே, சிகரெட் பிடித்தும் கொண்டு, அரை குறை ஆடை அணிந்தும், அவர்களுக்கும்
கோவில் காட்டி கும்பாபிஷோகம் செய்து கொண்டும் இருப்பார்களா? …
படம் வெளிவரும் போதேல்லாம், குடம் குடமாய்
பாலை ஊத்தி , உங்களை கொண்டாடி இருப்பார்களா? அதை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் தமிழர்கள், உங்கள்
மீது அன்பு கொள்ளாமல் இருந்து விட்டால், நாங்களும்
உங்களை பக்கத்து வீட்டு முனியம்மாவை போல நினைத்து விட்டிருப்போம்.
திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதினாலே, என்னவோ!
சாமியின் மீதும் தாலியின் மீதும் உங்களுக்கு மதிப்பு இல்லாமல் போயிருக்கலாம்.
ஆனால், தமிழர்கள்(திராவிடர்) குடும்பத்தின் பிணைப்பின் மீதும், திருமண
உறவின் மீதும் எந்தவோரு பங்கமும் தெரிவித்தது இல்லை. அப்படியும் வாழ்ந்ததும்
இல்லை. அறிவியல் வளர்ச்சி அடைந்து, நாகரிகத்தை
முன்னிறுத்தும் போது, பண்பாட்டை கொஞ்சம் கீழ் தள்ளியதை, அறிவு
ஒத்து கொள்ள செய்ததே தவிர மறுக்கவில்லை. அன்பு மட்டும் போராடி விட்டு ஒரமாய்
உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறது.
உங்களுக்கு வேண்டுமானால், கணவன் –மனைவி
உறவு என்பது நாகரித்தை கீழ் தள்ளுவதாகவும், ஆணாதிக்கத்தை
முன்னிறுத்தவதாகவும், தனி மனித சுதந்திரத்தை மழுங்கடிப்பதாகவும் இருக்கலாம்.
ஆனால், தமிழர்களிடம் அப்படியொரு நிலை வந்ததாக தெரியவில்லை.
சினிமா துறையில் உள்ளவருக்கு வேண்டுமானால், திருமணம்
செய்து கொண்டு, கதையின் தன்மைக்காக வேண்டுமானால், அடுத்த
நாளே தாலியை கயற்றி விட்டு, நடிக்க சென்றி விடுலாம்(அலைபாயுதே சொல்லுவது பொல, தொந்தரவு
பண்ணுவது எதற்கு). இந்த நாகரீகம் சின்னத்துரையில் சென்றது, மிகப்பெரிய
பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால், என்னை
ஆணாதிக்கம் பிடித்தவன் என்று சொன்னாலும் பரவாயில்லை.
தாலி என்பது வேலியை போல் இருப்பதானால் தான், பல
பிரச்சனைகள் இருந்தாலும் இன்றும் பல குடும்பங்கள் பிரியாமல், பண்பாட்டை
காத்து வருகின்றன.
திருமணத்தின் முன்னர், குழந்தை
பெற்று கொள்வதில் மட்டும் ஆசை கொள்ளும் தாங்கள், கணவன் –மனைவி
என்ற பந்தத்தை எதிர்ப்பது ஏனோ? என்று தெரியவில்லை. கணவன் – மனைவி
பந்தத்தில் தன்னுடைய தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படும் என்று நீங்கள்
நினைக்கலாம். இப்படி பல சினிமா நட்சத்திரங்கள் நினைப்பதால் தான், கோர்ட்
படி வாசலை சந்திக்க வேண்டி உள்ளது.
கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரும் பேச்சை கேட்டு
நடந்து கொள்ள வேண்டும். இருவரும் விட்டு கொடுத்து நடந்து கொள்வதை, வீட்டில்
சிதம்பரம் ஆட்சி என்றோ, மதுரை ஆட்சி என்றோ தவறாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை.
நீங்கள் எப்படி வேண்டுமானால், இருந்து
விட்டு போகங்கள். அதை யாரும் கேட்க போவதில்லை. ஆனால், ஒரு
பிரபலம் என்று வந்து விட்டால், நீங்கள் சொல்வதை இந்த சமுதாயம் உன்னிப்பாக கவனித்து
கொண்டு தான் இருக்கும். ஏற்கனவே லிவிங் டுகதர் என்ற வாழ்வியல் முறை தமிழகத்தினை
எட்டி விட்ட நிலையில், நாகரீகம் என்ற பெயரில், புதியதோரு
கலாச்சார முறையை உட்புகுத்த முயற்சிக்காதீர்கள்.
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment