Saturday, October 25, 2014

வியபார உத்திகளும் இலவசங்களும்

நான் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீபாவளி வியபாரம் ஒவ்வொரு கடையிலும், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒரு மளிகை கடையின் வாசலில், நிறைய பிளாஸ்டிக் வாளிகள் தொங்க விடப்பட்டிருந்தது.

என்ன பிளாஸ்டிக் வாளியை சேர்த்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்களா? என்ற மன கேள்வியோடு, விசாரித்து பார்த்தேன். தீபாவளி ஆபராக, அதிகமாக சமையல் எண்ணெய் வாங்குபவர்களுக்கும், அதிக மாளிகை சாமான்  வாங்குபவர்களுக்கும் இலவசமாக பிளாஸ்டிக் வாளி வழங்கப்படுகிறதாம்.

விற்பனை அதிகப்படுத்த, துணிக்கடை போல, மாளிகை கடையிலும் இலவசமாக தர அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு, இலவசம் என்ற வார்த்தை நம் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலாப சதவீதம் குறைவான மளிகை கடையில், இவ்வளவு அன்பளிப்புகளையும், இலவசங்களையும் வழங்குவது கடினம். அதனால், அந்த பிளாஸ்டிக் வாளியின் விலையை, வாங்குகிற சாமான்களின் மீதே வைக்க வேண்டிய அவசியம் வருகிறது. விலை சற்று அதிகமாகும். அதை, நாம் சிறிது யோசிப்பதில்லை. இலவசம் என்ற வார்த்தையுடனே அடங்கி விடுகிறோம் என்று நினைக்கிறேன்.

இந்த விஷயத்தில், உங்களுக்கும் கடைக்காரருக்கும் எந்தவோரு நட்டமும் இல்லை. லாபம் இல்லை. ஆனால், வியபார உத்தி என்ற பெயரில் சிறிய ஏமாற்ற தந்திரம்அவ்வளவு தான்……    
    
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment