Saturday, October 25, 2014

வேஷ்டி விளம்பரங்கள்

சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேஷ்டி அணிந்து வந்த நீதிபதிகளை அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பல தரப்பிலிருந்து, கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனே, தமிழக அரசும் பராம்பரிய உடையான வேஷ்டி அணிந்து வருவதை யாரும் தடை செய்யக்கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதனால் தழிகத்தின் பராம்பரியமும் பண்பாடும் நிலை நிறுத்தப்பட்டது என்று நாமும் மன நிம்மதி கொண்டோம். பண்பாடு என்பது வேஷ்டி அணிந்து வருவது மட்டுமில்லாது, என்பதை மறந்து விடலாகாது.

இதெல்லாம் யாருக்கும் உதவியதோ இல்லையோ, வேஷ்டி உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு, நன்றாக உதவியது என்றே கூறலாம். அதற்கு பிறகு, தமிழர்களின் அடையாளம் வேஷ்டி என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு அண்ணா, காமராஜர் போன்ற அரசியல் தலைவர்களை எடுத்து கொண்டார்கள்.

இதையெல்லாம் மிஞ்சிய மற்றொமொரு விளம்பரம். வேஷ்டி கட்டிகிட்டு, வாக்கிங் போகலாம், ஸ்க்கிப் பண்ணலாம்…. இப்படி பல செயல்களை, வேஷ்டி அணிந்தால் எளிதாக செய்ய முடியுமாம்??? என்ன கொடுமை சார்….இது …… சிரிப்பை தாண்டி கோபம் தான் வருகிறது……..

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment