Saturday, October 4, 2014

பெயரிடப்படாத முதியோர் இல்லங்கள்

முதியோர் இல்லங்களின் தொடக்கமும், அதனை தொடர்ந்த வளர்ச்சியும், நம்மை கவலை கொள்ள வைக்கிறது. அதனை பற்றிய கவலை, ஒவ்வொரு மானுடத்திற்கு இருக்க வேண்டிய ஒன்று. வெகு சிலரின் புரிதலினால் மட்டுமே தீர்க்க இயலாது. இதனை தாண்டிய சமுதாய மாற்றம் ஒன்று, மெல்லியதாய் நடந்து கொண்டிருப்பதய், இந்த தருணத்தில் கவனிக்க வேண்டிய அவசியமாகிறது.

ஏற்கனவே உடலியல் சார்ந்த நோய்கள் பல, வயதானவர்களை ஆட்கொண்டு  பாடாய் படுத்துகிற தருணத்தில், அவர்களின் உளவியல் சார்ந்த பிணிகளை கவனிக்க தவறி விடுகிறோம். பொதுவாகவே முதியோர்களின் பிணிகளை பிரித்து கொள்ளலாம். ஒன்று உடலியல் சார்ந்த பிணிகள்(இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி,கொலஸ்டிரால்…..). மற்றொன்று உளவியல் சார்ந்த வியாதிகள். இதை வியாதி என்று கூட சொல்வதை விட மனம் சார்ந்த ஏக்கம் எனலாம். இப்போது உள்ள வாழ்வியலில் இளைஞர்களுக்கே, மன அழுத்தம் ஏற்படும் போது, வயதில் மூத்தவர்களுக்கு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை.

பொதுவாக எல்லா மனிதனும், தன்னுடைய கடைசி காலத்தில், பேர குழந்தைகளோடு பேசி மகிழ விரும்புவர்கள். மேலும் செல்ல பிராணிகளுடனும், இயற்கையாய் அமைந்த மரங்களோடு கழிக்க நினைப்பர். ஆனால், இத்தகைய சூழ்நிலை முதியவர்களுக்கு அமைவது குறைந்து வருகிறது. இதற்கு பல பின்புலங்கள் உண்டு என்றாலும் உண்மையை மறுப்பதற்கில்லை.

விவசாயம் நசிந்து ,வருமானத்தை முன்னிட்டு பெருநகரங்கள் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போதே, கூட்டு குடும்பங்களில் விரிசல் அதிகமாகி, தனிக்குடித்தனம் அதிகமாகிற்று. பெற்றோர்களினால் பிறந்த வீட்டையும், வாழ்ந்த மண்ணையும் விட்டு, நகரங்களினை நோக்கி பயணிப்பது என்பது அவ்வளவு எளிதானல்ல. அதே போல், கிராமத்தில் வருமானம் இல்லாத போது, நகரத்தில் இருந்து, தன் சொந்த ஊருக்கு பெற்றோருக்காக, பிள்ளைகள் வரும் கஷ்டமான ஒன்று.

இந்நிலையில், பேரக்குழந்தைகளினை பார்க்காமலும் தன்னுடைய தேவைகளையும், அவர்களே பார்த்து கொள்வது, உடல் ரீதியான பாதிப்பை அதிகப்படுத்துகிறது. மேலும் மனம் சார்ந்த புழுக்கம் இன்னும் அதிகமாகி விடுகிறது. இன்னும் ஆழமாக சிந்தித்தால், மூத்தவர்களின் மனம் சார்ந்த ஏக்கமும், பாசமும் நிறைய வலிகளை தர கூடியது.

அப்படியே பிள்ளை வீட்டிலும், பேர குழந்தைகளுடனும் இருந்தாலும், அவர்களுக்கு சில வலிகள் இருக்க தான் செய்கின்றன. வயதானவர்கள் பெரும்பாலும், ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி சிந்தித்து கொண்டும், அதை பற்றி பேசபவர்கள். ஆனால், அதற்குரிய சுதந்திரம் இருக்கிறதா ? என்பதே மிகப்பெரிய கேள்வி. “ பெருசுக்கு வேலை இல்லஏதாவது தொன தொனன்னு பேசிக்கிட்டு இருக்கும்…” என்பது போன்ற வார்த்தைகளை கேட்டிருக்கலாம். வயதில் மூத்தவர்களின் பேச்சுகளினை  நாம் காது கொடுப்பதற்கு தயராக இல்லை. அதற்காக நேரமும் நமக்கு இருந்ததில்லை. ஆனால், முக நூலில் அரட்டை அடிக்கவும், வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பவதற்கும் நேரம் இல்லாமல் இல்லை. பெற்ற குழந்தைகளிடமோ, மனைவியிடமோ பேசுவதற்கு கூட நேரமில்லாதவர்களால் என்ன தான் செய்ய முடியும்???

பத்து சதுர அடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு, வெறுமனமே டிவியை மட்டும் பார்த்து கொண்டிருக்க, மூத்தவர்களால் முடியாது. பாசத்திற்கு ஏங்குபவர்களிடம், பணத்தை மட்டுமே கொடுத்தால் மட்டும் போதும் என்று எண்ணாதீர்கள்.

மேற்கண்ட இரு நிலைகளினையும், வாழ்வில் ஏதேனும் ஒரு நிலையில் கண்டிருக்கலாம். அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். இது சமூக மாற்றத்தின் தொடக்க நிலையில் உள்ள நிகழ்வு. இதை, இப்போது பார்த்து களைய பட வேண்டிய ஒன்று.

 ஏற்கனவே தனிக்குடித்தனம் அதிகமாகி, பெற்றோர்களுக்கு உரிய மதிப்பு குறைந்து வரும் நிலையில், கூட்டு குடித்தனத்திலும் பாசமும் குறைந்து வருவது சமூகத்திற்கு நல்லதல்ல.

முதியோர் இல்லங்களில் கூட, மற்ற பெரியவர்களிடம் பேசும் சுதந்திரம் இருக்கிறது. பிள்ளை வருவில்லை என்பதை தவிர பெரிய குறை இல்லை. ஆனால், வீடுகளில் சுதந்திரம் கூட இல்லாமல், மூடமாக்கப்பட்ட மனித ஜாடமாக வாழ வேண்டிய நிலை உள்ளது. பெற்றோர்களும், பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் பல மணி நேரம்  உட்கார்ந்து, மனம் விட்டு பேசுங்கள். அதுவே உங்களை வளமாக்கும். உங்கள் சமுதாயத்தை வளமாக்கும். களையை ஆரம்ப நிலையிலே கிள்ளி விட்டால், பயிர் நன்றாக வளரும். இல்லேயேல், பாசம் என்ற பயிரை அழித்து விட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே முதியோர் இல்லங்கள் அதிகமாகி விட்டு, வீட்டையே இன்னொரு முதியோர் இல்லங்களாக மாற்ற வேண்டாம்.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment