Saturday, October 25, 2014

அமைதிக்கான நோபல் பரிசு

இந்தியாவினை சேர்ந்த கைலாஷ் வித்யார்த்திக்கும், பாகிஸ்தானை சேர்ந்த மாலாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் காஷ்மீரில் தாக்குதல் நடந்து வரும் வேளையில், இந்த பரிசு முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் குழந்தைகளின் கல்விக்கும் முன்னேற்றிதிற்காகவும் இந்த கெளரவம் கிடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு முதல் நோபல் பரிசாகவும், மிக குறைந்த வயதில் பெற்ற பரிசாகவும் மாலாலாவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்தப்பிறகு, இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியிலிருந்து, தலிபான்களின் மீதான எதிர்ப்பு குரலை பல நேரங்களில் பதிவு செய்தவர். அதற்காக பல வேதனைகளையும் அடைந்து, பெண்களின் கல்விக்காகவும் முன்னேற்றிகாகவும் உழைப்பது பாராட்டப்பட வேண்டிய தான். அதுவும் மிக குறைந்த வயதில் என்பது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று தான்.

இந்தியாவினை சேர்ந்த கைலாஷ் வித்யார்த்தியும் குழந்தை தொழிலாளர்கள் பலரை மீட்டு, குழந்தைகளின் படிப்பிற்கு வழிவகை செய்தவர். இதற்காக, பல உலக விருதுகளையும் பெற்றவர். ஆனால், இந்தியாவில் போற்றக்கூடிய நபராக இருந்த்தில்லை என்பது வருத்தமான விஷயம். நோபல் பரிசு கிடைத்தப்பிறகு தான் வீக்கிப்பிடியாவில் தேட கூடிய நிலையில் உள்ளது.

எது எப்படியோஇது அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியா-பாகிஸ்தான் அமைதிக்கு வித்திட்டால் நல்லது.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment