Sunday, November 23, 2014

தீபாவளியும் துன்பங்களும்

காலை 4 மணிக்கே எழும்பி
கடுங்குளிரில்
எண்ணெய் தேய்த்து குளித்து
மஞ்சள் பூசிய புது துணியை போட்டு கிட்டு

நம்ம சுட்ட பலகாரங்களை எடுத்து கிட்டு
பக்கத்து வீடு, எதிர்த்த வீடு
சொந்த காரங்க வீடு என
ஊரு புர பலகார பார்சல் எடுத்து போய் கொடுத்திட்டு
அவங்க தரற பார்சலை வாங்கிட்டு வந்து

நம் வீட்டுக்கு பத்து பேர் வந்து
அவங்களோடு  காலையில் இருந்து மாலை வரை கதை பேசி
அப்புறம் எல்லா இடத்திலும் சாப்பிட்டு
இருக்கிற சுகர், பிரசர் எத்திகிட்டு

தீபாவளி போடுற எந்த படத்தையும்
ஒழுங்க பார்க்க முடியுமா??
ஸ்வீட்ட கூட ஒழுங்கா ரசித்து சாப்பிட முடியாம?

இரண்டு நாளாக கண் விழித்து
பலகாரம் சுடும் பெண்கள்
மணி பர்ஸ் காலியான அப்பா
கடன் வாங்கி புது துணி வாங்கிய ஏழை
இப்படியாக தீபாவளி
ஒருவிதமான துன்பமாக இருப்பதாக உணர்கிறேன்

கொஞ்சம் மாத்தி யோசித்து பார்ப்போம்.
தீபாவளிக்கு காலைக்கு ஏழு மணிக்கு எழும்பி
காலையில் அசைவம் சமைத்து சாப்பிட்டு,
மதியமாக குளித்து விட்டு

யாரும் விட்டு போகாம
நிம்மதி டிவிய பார்த்துகிட்டு
9 மணிக்கே படுத்து தூங்கின
எவ்வளவு சந்தோஷமா இருக்கும்

இது தான் லீவு மாதிரி தெரியுது….
அத விட்டுட்டு
காலையிலிருந்து மாலை வரை
ஊர் முழுவதும் சுத்தி
உடம்பு  அசதி உண்டாகி
டிவி கூட பார்க்க முடியாம
ஒரே டென்ஷனாக இருப்பது தேவைதானா?

சந்தோஷத்திற்கான விடுமுறையிலும்
இவ்வளவு துன்பங்களா
கொஞ்சம் யோசிக்க வேண்டி உள்ளது..



|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment