நேற்று, ஒரு டைலரிடம் பேசி கொண்டிந்தேன். தீபாவளி
வியபாரம் எப்படி இருந்தது?? என்று
கேட்டேன். எப்போதும் போல, சிறப்பாக
இருந்தது என்றார்.
” கடையில், 200 ரூபாய்க்கு நல்ல ரெடிமேட் சட்டை
கிடைக்குது…. ஆனால், உங்களுக்கு மட்டுமே, தைக்கிறத்து 200 ரூபாய் கொடுக்க வேண்டி
உள்ளதே??? ஏன் ??? “ என்ற என்னுடைய நீண்ட நாள் கேள்வியை
கேட்டேன்.
ஒரே அளவுள்ள
நிறைய சட்டைகள் தைப்பார்கள். அதனால், அதன்
அளவுப்படி வெட்டுவது எளிது. முழு சட்டையும் ஒரே ஆள் தைக்க மாட்டார்கள். கையை
மட்டும் ஒருவர், பாக்கெட்
மட்டும் ஒருவர் என தனித்தனியாக செய்வர். அதனால், மிக குறைந்த விலையில், விரைவாகவும் தைத்து விட முடியும். இது
அனைத்தையும், நாங்களே
செய்வதால், அதிக நேரம் எடுத்து கொள்கிறது. எனவே விலை உயர்வு
தவிர்க்க முடியாதாகி விடுகிறது என்றார்.
நல்ல
கஷ்டப்பட்டு தைச்சா…. ஒரு நாளைக்கே
1000 ரூபாய் கூட சம்பாதிக்கலாம். அதாவது மாதம் 30,000 ரூபாய் கூட சம்பாதிக்கலாம்.
அரசாங்க வேலையை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஆனால்………………………………………. என இழுத்தார்.
ஒரு மாசத்துகு
5,000 ரூபாய் கூட கையில மிஞ்ச மட்டாங்குது சார்….. எனக்கு தண்ணி பழக்கம் இல்லை, சிகரெட் பழக்கம் இல்லை….. ஏன் டீ, காபி கூட அதிகம் குடிக்க மாட்டேன்… ஆனாலும், கையில காசு தங்க மாட்டாங்குது சார்…
யாரும் காசு
கொடுக்கும் போது, மன
நிம்மதியோடு கொடுக்கிறது இல்ல….. இந்த சட்டை தைக்கிறதுக்கு, 200 ரூபாயா?? என்று நினைத்து கொண்டே கொடுக்கிறார்கள்.
அப்புறம் எப்படி சார்?? காசு தங்கும்.
நூத்துல, பத்து பேர்
தான், நிம்மதியா
கொடுக்கிறாங்க… மத்தவங்க… எல்லாம், மனசுக்குள்ளே திட்டி கொண்டே கொடுக்கிறாங்க….
அவர் சொல்வது
உண்மை….. நாம் யாரும்
மன நிம்மதியோடு கொடுக்கிறது இல்லை… எனக்கு அந்த
மனநிலை உண்டு…. இந்த நிகழ்வு
டைலர் தொழிலுக்கு மட்டுமில்லாமல், எல்லா வகையான
அன்றாடம் கூலி வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்கும் போது ஏற்படும்.
கொத்தனார்
வேலைக்கு, ஒரு நாளைக்கு
600 ரூபாயா??
மூடி
வெட்டுறத்துக்கு 100 ரூபாயா??
ஒரு டீ விலை 7
ரூபாய், அதுல என்ன
அப்படி செலவு இருக்கு??
இப்படியாக பல
கேள்விகள், ஒவ்வொருவரும்
மனதிலும் தினமும் ஏற்படுபவை தான். ஆனால், மற்றவர்களின்
தொழில் செய்வதை பற்றியோ, அதில் உள்ள
கஷ்டங்கள் பற்றியோ நாம் யாரும் யோசிப்பதில்லை. இனி வரும் காலங்களிலாவது மன
நிம்மதியோடு, வேலைக்கான
சம்பளத்தை அளிப்போம்.
சாபத்திற்கு, இவ்வளவு மதிப்பு இருக்கிறதா????…. இன்று தான் தெரிந்து கொண்டேன்……….. இதுனால தான்….. கூலி தொழிலாளர்கள்… இன்னும் ஏழையா இருக்காங்களோ!!!!!!
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment