Sunday, November 23, 2014

சக மனிதனை பற்றிய புரிதலும் அதிகார தோரணையும்

ஒவ்வொரு மனிதனும் சக மனிதனை பற்றிய புரிதல், எந்த அளவிற்கு உள்ளது என்று யோசித்து பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சம். பல பிரச்சனைகளுக்கும், அதுவே காரணமாக அமைந்து விடுகிறது. 

கணவன் மனைவி, அண்ணன் தம்பி, அக்கா- தங்கை, அண்ணன் தங்கை., நண்பர்கள், நண்பிகள் என்ற கிட்டத்தட்ட ஒரே வயதிற்கு இடையே உள்ள பந்தங்களில் கூட புரிதல் இல்லை. அதற்கான காரணங்கள் பல உள்ளது. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், தன்னுடைய வயதில் பத்து வயது குறைந்தவர்களின் மீதானவர்களின் புரிதல், வயது அதிகமானவர்களிடம் தெளிவாக இல்லை என்பது தான் பிரச்சனை.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கினரையும் போற்ற கூடியவர்கள். அதில் பெற்றோர்கள் குழந்தைகளையும், ஆசிரியர்கள் மாணவர்களையும் எவ்வாறு புரிந்து கொள்கிறது என்பதே நம்முன் நிற்கும் கேள்வி.

பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாது…. அனுபவம் குறைவுஅதனால் தான் நாங்கள் முடிவு எடுக்கிறேன் என்ற வாதம்  பெற்றோர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு கூறுவதில் நியாயம் இருக்கிறது என்பதை ஒத்து கொள்கிறேன். ஆனாலும், பிள்ளைகளின் மீது உங்கள் கொள்கைகளை திணிக்க போதும் பிரச்சனை அதிகமாகிறது. பிள்ளைகள் கூறுவதையும் கேட்டு, அதற்கேற்ப முடிவு எடுங்கள். அதை விட்டு, முடிவு எடுத்து விட்டு, அதையே செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டாம்.

இன்றைய விஞ்ஞானம் உலகம் வேகமானது. விவேகமானது. அவர்களுடைய வயதிற்கு அனுபவம் குறைவு தான். அதே சமயத்தில், அறிவை குறைத்து மதிப்பிட முடியாது. பிள்ளைகளின் எண்ணங்களுக்கு ஏற்பவும் நடைமுறை சூழலுக்கும் ஏற்பவும் முடிவு எடுப்பது நல்லது. இதில் ஒரு தலைமுறை இடைவெளியையும், அதிகார தனத்தையே காண முடிகிறது.

அதே நேரத்தில் சமீப காலங்களில், பிள்ளைகளின் எண்ணங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பெற்றோர்களும் அதிகமாகி வருகிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது. இந்த புரிதலை, அனைத்து இடங்களிலும், நிலைப்பெற வேண்டும் என்பதே எண்ணுடைய திண்ணம்.

ஆசிரியர்- மாணவர் உறவு என்பது சற்று கரடுமுரடாக உள்ளதாகவே எண்ணுகிறேன்.. வகுப்பில் உள்ள அனைத்தும் மாணவர்களும் ஒரே மாதிரியாக புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் புரிந்து கொள்ளும் தன்மையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. செயல் முறை கற்றல் குறைப்பாடு உள்ள குழந்தைகளை பற்றிய விழிப்புணர்வும் இருப்பதில்லை.

பெற்றோரை அடுத்து மாணக்கர்கள்ஆசிரியர் அரவணைப்பில் தான் அதிகமாக உள்ளனர். மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது ஆசிரியர் மட்டுமே சாத்தியமான ஒன்று. ஆனால் தான், படிப்பினை தாண்டியும் உங்கள் கவனத்தை மாணவர்களின் மீது செலுத்த வேண்டும். நடைமுறையில், மாணவர்கள் மானப்பாடம் செய்து, தேர்வில் வாந்தி எடுப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

தன் நிலையிலிருந்து மாணவர்களினை பார்ப்பதை விட்டு விட்டு, மாணவர்களின் மனநிலையில் இருந்து பார்க்க வேண்டும். இந்த புரிதல் ஆசிரியர்களுக்கு இல்லாதது, ஆச்சரியமான ஒன்றாக கருதுகிறேன். இந்த புரிதலை, கல்வியும் சொல்லி கொடுக்கவில்லையா?? என்ற கேள்வி தான் எழுகிறது.

குழந்தைகளாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும், அவர்களின் மீதான குறைந்த பட்ச புரிதலையாவது கொண்டு, அந்த எண்ணத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு நல்வழிகளை எடுத்து முன்வையுங்கள்….. மாறாக உங்கள் எண்ணத்தை முன் வைத்து, வற்புறுத்தாதீர்கள்.

(தனி மனித மாறுதலுக்கு உட்பட்டது. மாற்று கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment