Sunday, November 23, 2014

ஜீவா படமும் கிரிக்கெட்டும்

ஜீவா படம் பார்த்தேன். மிக அருமை!!!!

படத்தின் இயக்குனர் சுசீந்திரனுக்கும், நடிகர் விஷ்ணுவுக்கு பாராட்டுகள். இப்படிப்பட்ட உண்மையான அரசியல் சூழலினை, சினிமாவின் மூலம் தைரியமாக கொண்டு வந்ததற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக, அரசியல் நெருக்கடிகள் வந்திருக்கலாம். அதை தாண்டி வெளியிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்த படத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன். முதலாவது பள்ளி பருவக் காதல். இன்றைய கால கட்டத்தில், காதல் கல்லூரியை தாண்டி, பள்ளி வரை முன்னேறி சென்று விட்டது. அத்தகைய காதல், எனக்கு நல்லதாக தோன்றவில்லை. தன்னை அறியாத வயதில் உண்டாகும் காதல், ஈர்ப்பாக இருக்குமே தவிர, காதல் என்று சொல்ல முடியாது. அதை தெளிவாகவே காட்டி இருக்கிறார்.

அடுத்தது, ஒன்றின் மீதான ஈர்ப்பு அதிகமாகி, அதில் தோல்வி அடையும் போது, தனக்கு பிடித்தமான மற்றொன்றை நோக்கி நம் பார்வையை திருப்புவது. இது தான் வாழ்க்கையின் எதார்த்த நிலை. இதை தெளிவாக சொல்லி, காதலிருந்து கதையை கிரிக்கெட்டுக்கு திருப்புகிறார்.

அடுத்தது தான், கதையின் முக்கியமான கருவான கிரிக்கெட்டில் உள்ள சாதிய அரசியல். சாதாரணமாக, கதைக்காக சொல்லாமல், உண்மையை நிலையை முன் வைக்கும் போது தான், கதையின் மீதான அழுத்தம் அதிகமாகிறது. இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இருந்து 16 பேர், இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார்கள். அதில் 14 பேர், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்….” என்று கூறும் போது, தொண்டை தழுதழுக்கத்தான் செய்கிறது.

இந்த படத்தின் மீது, தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை. இதிலிருந்து, இவையனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது.

இந்தியா அணி தோற்கும் போதெல்லாம், ” 130 கோடி மக்கள் உள்ள நாட்டில், கிரிக்கெட் விளையாட திறமையான 11 பேர் இல்லையா???? ”   என்ற கேள்வி நமக்குள் எழும். இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஆசிய விளையாட்டானாலும் சரி….. ஒலிம்பிக் விளையாட்டினாலும் சரி….. இத்தகைய அரசியல் நிலை, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையாக இருக்கிருமே தவிர…. மாறாது என்பது மட்டும் உண்மை.

எல்லா நாடுகளில், வீர்ர்கள் விளையாடி தான் தோற்று போகிறார்கள் .ஆனால், இந்தியாவில் தான், வாய்ப்பு கிடைக்காமல் தோற்று போகிறார்கள்…”  என்று நெற்றியடி வசனத்தை வைத்து முடிந்திருப்பது …. நச்நச்

ஐபிஎல் போன்ற விளையாட்டை போல், pro-kabadi, Indian super league, Indian batmittion league போன்றவை மக்கள் மனதில் மாற்றத்தையும், விளையாட்டு வீர்ர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பணம் விளையாடுகிறது என்பதை தாண்டி, விளையாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தினால் நல்லது.

இதை சாதாரண சாதிய அரசியலாக மட்டும் முன்னிறுத்தாமல், சினிமா தனங்களுடன் முன்னிறுத்தும் போது தான், மக்களை எளிதாக சென்றடையும் என்ற உத்தியை இயக்குனர் தெளிவாக கையாண்டு இருக்கிறார்….  

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment