கடந்த இரு தினங்களில் நடந்த இரண்டு நிகழ்வுகள், எனக்கு மன நெருடலை தந்தது.
1. புற நோயாளர் பிரிவில் மருத்துவம் சம்பந்தமான புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன். ஒய்வு பெற்ற ஆசிரியர், இந்த நிகழ்வை பார்த்து, ” பரீட்சைக்கு படிக்கிறீங்க சார்??” என்றார்.
2. வீட்டில் சமூகவியல் புத்தகத்தை படித்து கொண்டு இருந்தேன். அப்போது வந்த உறவினர் ஒருவர், “ என்ன தம்பி!!! எக்ஷமா?? “ என்றார்.
என் நண்பர் சொன்ன நிகழ்வையும், இந்த இடத்தில் நினைவு கூர்தல் நலம் என்று நினைக்கிறேன். வேலை கிடைத்த பிறகு, ”ஏன் புத்தகங்களை வாங்குகிறாய்??” என்று அப்பா கேட்டு இருக்கிறார்.
மேற்கண்ட அனைத்தும், ஒரு தட்டையான புரிதல் இருக்கிறது. அதாவது புத்தகம் படிப்பது என்பது எக்ஷம் எழுவதற்கு மட்டுமே!!! வேலை பெறுவதற்கு மட்டுமே!!! இந்த எண்ணத்திற்கு மேல்குடி, கீழ்த்தட்டு மக்கள் என்ற வரையறை கிடையாது. படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு கூட கிடையாது.
கல்வி பயில்வது எதற்கு??.... சற்று சிந்தித்து பாருங்கள்…. நிச்சயமாக, 10ல் 8 பேர் வேலைக்கு செல்வதற்காக…. என்றே பதிலளிப்போம்!!! இவையெல்லாம் தவறான புரிதல்…..
எதிர்கால பிரச்சனைகளை, எளிதாக வெல்லத்தக்க அறிவை தரக்கூடிய கருவியே கல்வி ஆகும். அந்த அறிவை புத்தகங்கள் மூலமே பெற முடியும். அதையெல்லாம் விட்டு விட்டு, புத்தகம் படிப்பதே, தேர்விற்காக மட்டுமே என்ற சமூகத்தை வைத்து கொண்டு, நான் என்ன செய்வது???
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment