கல்வி குறித்து
விவாதங்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் வியாபித்து இருக்கின்றது. இதில் நிறைய
பரிமாணங்கள் உள்ளது. அதில் ஒன்று…
கல்வியை அரசுடமையாக்குவது
ஒரு தரப்பினரின் வாதம்!!! இன்னொரு புறம் தனியார் மயமாக்குவது சிறந்தது , மற்றவரின் வாதம்!!!
என்னை
பொறுத்துவரை, இரண்டையும் கலந்து செய்வது சிறந்த முறை
என்பேன்!!! அதாவது இப்போது இருக்கும் முறையே நல்லது தான்!!!
கல்வியை
கற்பித்தல், பாடத்திட்டங்களை வடிவமைத்தல், ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துதல், பள்ளிகூடங்களின்
உட்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துதல் போன்ற கோணங்களில் சீர்திருத்தம் செய்ய
வேண்டிய உள்ளதே தவிர, கல்விகூடங்களினை யார் நிர்வகிப்பது? என்பது முக்கியமான பிரச்சனையாக தோன்றவில்லை!!!
இன்று தமிழ்நாடு
பள்ளிகல்வி மற்றும் உயர்கல்வியில் இந்திய அளவில் முன்னேறி இருப்பதற்கு காரணம், அரசு பள்ளி மட்டுமல்ல!!! சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே, கல்வித்துறையில் தனியார் பங்களிப்பை கொண்டுவந்தது தான்!!! உங்கள் ஊரில்
இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளி,
அல்லது உதவி பெறும்
கல்லூரி என்பது தனியார் மயத்தின் முதல் படி!!!!
50 ஆண்டுகளுக்கு
முன்பு வேண்டுமானால், அரசுடைமை என்பது சிறந்த கூறாக அமைந்தது. ஆனால்… இன்றோ …. உலக நிலைமை நேர் எதிரான நிலைமை!!! சுமார் 15-20
ஆண்டுகளுக்கு முன்னர் அரசுடமையை கையிலெடுத்த வெனிசுலா நிலைமை நீங்களே கவனித்து
இருப்பீர்கள்!!! அதோடு மட்டுமல்லாமல்…. அரசுடமை
ஆக்குவதற்கான நிதியை சேர்த்தே யோசிங்க மக்களே!!
எனக்கு தெரிந்த
வரை, வேதாரண்யம் பகுதிகளில் 15-20 வரையான தனியார்
பள்ளி கூடங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு நிறுவனத்தின் மொத்த மதிப்பும், சுமார் 50 லட்சம் முதல் 5 கோடி வரை கூட இருக்கும். அப்படி இருக்கையில்
தமிழ்நாட்டின் மொத்த பள்ளிகளை அரசுடைமையாக்கினால், எவ்வளவு பணம்
தேவைப்படும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!!!!( தமிழ்நாட்டின் கடன்
அளவு ஜிடிபி ஒப்பிட்டால் 23 சதவீதம் உள்ளது என்பது உபரி தகவல்)
அப்படியே
வாங்குவதாக இருந்தாலும், பள்ளி நிர்வாகிகள் விடுவார்களா??? இல்லை, சட்டம் தான்…… அதற்கு துணை
நிற்குமா???
அடுத்து… முழு தனியார் மயத்திற்கு வித்திட்டால் நிலைமை இன்னும் மோசம்!!! லாபத்திற்காக
ஆசிரியர்கள் முழுமையாக சுரண்ட படுவார்கள்!!! முழுவதும் கிணத்து தவளைகளாக வெளி
வருவார்கள்!!! இன்னும் நிறைய சொல்லலாம்!!!
மேலும்….
1981 ஆம் ஆண்டு
தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 3.4 சதவீதம், 2016 ஆண்டு 1.7
சதவீதமாக குறைந்துள்ளது. நீங்களே நன்கு அறிந்து இருப்பீர்கள்.!!! இன்றைய தம்பதிகள்
ஒரு குழந்தைக்கு அதிகமாக பெற்று கொள்ள விரும்பவில்லை!!!!. இப்படியிருக்க எப்படி
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும்????
இது ஒருபுறம்
இருக்க!!! நான் பள்ளி படிக்கும் போது, ஒன்றிரண்டு
தனியார் பள்ளிகள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ 15-20 நிறுவனங்கள் வரை பெருகி
விட்டன!!! அதிலும் ஆங்கில மோகம் அதிகமாகி விட்டதால்…… தனியார்
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிகமாகி விட்ட நிலையில், அரசு பள்ளிகளில் குழந்தைகள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்!!!
தெரு தோறும்
தொடக்க பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி என்பது காமராஜரின்
நிலைப்பாடு. இந்த புரிதல் என்பது,
50 ஆண்டுகளுக்கு இருந்த
சாலை போன்ற அடிப்படை வசதிகள் அடிப்படையில் அமைந்தது. ஆனால்…இன்றோ…. 20 கிமீ தூரமாக இருந்தாலும், அரை மணி நேரத்தில் செல்லும் அளவிற்கு சாலை வசதியும், வாகன வசதியும் உள்ளது. இதனையும் மாற்றி சிந்திக்க வேண்டி உள்ளது!!!!
இப்படியே சொல்லி
கொண்டே போகலாம்!! சம கால புரிதலோடு புரிந்து கொள்ளுங்கள்!!! அதை விடுத்து
அரசுடமையோ, தனியார் மயமோ சிறந்தது ……. எங்ஙனம் என்று புரிந்து கொள்ள இயலவில்லை!!!!
உனக்கு ஒன்றுமே
தெரியாது என்று கூட நீங்கள் நினைக்கலாம். சொல்வதில் தவறிப்பின், முழுமையாக தரவுகளோடு நிருபியுங்கள்!!! ஒத்து கொள்கிறேன்!!! மாறாக கம்பு
சுத்துவதில் பயனில்லை!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment