எனக்கு
பிடித்தமான விஷயங்களில் ஒன்று அரசியல்!!!! ஆனால் சில ஆண்டுகளாக அரசியல் பேசுவதை
குறைத்தே வருகிறேன். குறைவாக பேசுவேன்/மெளனமே/புன்னைகையே பதிலாக கடந்து விடுவேன்.
சம காலத்தில்
அரசியலை புரிந்து கொள்கிற தன்மை குறைவு ஒரு காரணம்!!! சமூகவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், வரலாறு ஆகியவற்றோடு அரசியலை சேர்த்து
பார்க்கும் போது அரசியல் பேசுவதும் வெட்டி வேலையாக கூட தெரிகிறது( அதாவது அரசியலை
தனித்து மட்டும் பேசுவதால்)
மக்கள் எதிர்பார்ப்பது
தூய்மை வாத அரசியல்!!! பொதுநல எண்ணம் குறைந்து சுய நல எண்ணம் அதிகமாகி விட்டது!!!
அதில் எங்கே தேடுவது தூய்மை வாத அரசியலை!!!! நடைமுறை அரசியலுக்கும், மக்கள் எதிர்ப்பார்க்கிற அரசியலுக்கு இடைவெளி
அதிகமாகி விட்டது. இது குறைவது சாத்தியமே இல்லை!!! ஏனெனில் எதிர்பார்ப்பில்
நடைமுறைக்கு ஒத்து வராதே அதிகம்!!!
தலைவர் வந்து
எல்லாவற்றையும் சரி செய்து விடுவார் என்பது போன்ற அறிவற்ற புரிதல் எதுவுமில்லை.
அது போல் தான்….. கம்யூனிசம்
வந்தால் நல்லாயிருக்கும்!!! மாக்சினியம் வந்தால் நல்லாயிருக்கும்!!! திராவிடம்
வந்தால் நல்லாயிருக்கும்!!! தலித்தியம் வந்தால் நல்லாயிருக்கும்!!! அம்பேத்காரிசம்
வந்தால் நல்லாயிருக்கும்!!!
வரலாற்று ரீதியாக
பார்த்தால், எந்த
கருத்தியலும் குறிப்பிட்ட காலத்தில் சிறந்ததாக இருக்கும். காலம் செல்ல செல்ல……
அதே கருத்தியல்
சமூகத்தினால் நிராகரிக்கப்படும்!!!! இது கருத்தியல் மட்டுமல்ல!!! அனைத்திற்கு
பொருந்தும்!!! சூழ்நிலையும் காலமும் தான், அதன் தேவையை முடிவு செய்யும்!! இது புரியாமல் பேசி கொண்டிருப்பதில்
பயனில்லை!!!
இதையெல்லாம் விட
முக்கியமானது!!! பொதுமக்களின் அரசியல் சார்பு நிலை!!! அனைவரும் ஒரு கருத்தியலோ/கட்சியானலோ
ஈர்க்கப்பட்டு இருக்கின்றனர். சிலருக்கு நிலையாக இருக்கலாம்!!! சிலருக்கு மாற
கூடியதாக இருக்கும்.
ஒரு கட்சி தலைவன்
சொன்னால், 100 சதவீதம் நல்லது
என்று முட்டு கொடுப்பதும்…. அதே சமயத்தில்
எதிர்கட்சிகள் சொன்னால் முழுவதும் கெட்டது என்று வாதிடதும் அதிகமாகி வருகிறது.
அரசியல் சார்ந்த சுய சிந்தனை இல்லாத போது விவாதித்து என்ன பலன்??
கட்சி தொண்டனாக
இருந்து, ஆயிரம் விஷயங்களை
கேட்க முடியும். ஆனால் கட்சி தலைவராக இருந்தும் ஒரு விஷயத்தை செய்ய முடியுமா??
குழந்தையாக தந்தையிடம்
ஆயிரம் விஷயங்களை கேட்கலாம். ஆனால்… அக்குழந்தையே தந்தையாகும் போது, தன் குழந்தைக்கு அனைத்தினையும் செய்ய முடியுமா??
புரிந்தவனுக்கு…..
அரசியலில் உள்ள
நுண்ணரசியல் புரியும்!!! ஏன் பேச வேண்டாமென்பதற்கு!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment