கஜா புயல் வந்து, சுமார் 8 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் அவை
ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம்!!! மரங்கள் மற்றும் வீடுகளினை அதிகமாக பாதித்தது.
அவ்வாறு முறிந்து
விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்கான செலவுகள் அதிகம்!!! அதனால் தான், தமிழக அரசு கூட, தென்னமரத்திற்கு 600 யும், அதனை அப்புறப்படுத்துவதற்கு 500 வழங்கியது. இவ்வாறு செலவு அதிகமாவதால், சில இடங்களில்
அப்படியே கிடக்கிறது. அது கால போக்கில் மக்கி, மண்ணோடு கலந்து
விடும். சுற்றுபுற சூழலிற்கு பிரச்சனையில்லை.
வீடுகளும்
அதிகமாக சேதமாகி இருக்கிறது. வீட்டின் கூரையாக வேய்ந்திருந்த ஆஸ்பெடஸ் சீட், தகர சீட், ஒடுகள் முழுவதும் சேதமடைந்து விட்டது. இதில்
தகர சீட்களை, பழைய இரும்பு கடைகளிடம் கொடுத்து விட்டார்கள்.
ஆதலால், பிரச்சனையில்லை.
ஆனால்…. ஆஸ்பெடஸ் சீட் மற்றும் ஒடுகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி, சாலை ஒரங்களில் கொட்டி வைத்துள்ளனர். வீட்டிலிருந்து அப்புறப்படுத்திய
திருப்தி!!! ஒடுகள் சாலை ஒரங்களில் கொட்டுவதால், சுற்றுபுற
சூழலுக்கு பெரியளவிற்கு பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் ….ஆஸ்பெடஸ் சீட் பெரியளவிற்கு பெரியளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எளிதில்
மக்காது. மண் வளத்தை பாதிக்க கூடியது. ஏற்கனவே பல வழிகளில் சுற்றுபுற சூழல்
பாதிக்கப்பட்டு கொண்டிருக்கையில்,
இது கூடுதல் பிரச்சனை!!
தூய்மை இந்தியா
இயக்கத்தினை பேசி கொண்டிருக்கும் தருணத்தில், திட கழிவு மேலாண்மை
பற்றி பேச வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன். மறுசுழற்சி வாய்ப்பிருப்பின்
செய்யலாம். இல்லையென்றால், முறையாக அகற்றுவதை பற்றி யோசிக்க வேண்டியதும்
அவசியம்!!!
சுத்தமாக இருக்க
வேண்டியது, நமது வீடு மட்டுமல்ல!!! சுற்றுபுறமும் தான்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment