சமீப காலங்களில், சில செயல்களை அதிகமாக
காண முடிகிறது. அதில் ஒன்று தான்
காரத்தே வகுப்புகள்!!!! ஞாயிற்று கிழமைகளில் காலையிலே காரத்தே வகுப்புகளுக்கு செல்லும்
மாணவர்கள், காரத்தேவில் பரிசு பெற்றதாக காணப்படும்
சுவரெட்டிகள் என பல தருணங்களில்,
காரத்தே கண்டிருக்கிறேன்.
காரத்தே,
நிச்சல், சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை
கற்று கொள்வது அவசியம்!!! அதில்
தவறில்லை. ஆனால், அது ஒரு
பேஷனாக மாறி வருகிறதோ என்று
தோன்றுகிறது.
முன்னரெல்லாம்,
மியூசிக் கிளாஸ், பரதநாட்டியம் கிளாஸ்
போன்று, இன்றைய தற்காப்பு கலை
சார்ந்து வகுப்புகள், பேஷனாகவும் வணிகமாகவும் மாறி வருகிறதோ என்று
தோன்றுகிறது.
இதையெல்லாம்
தாண்டி.... தற்காப்பு பயிற்சிகளை செயல்படுத்துவதற்கு அளவிற்கான மன புரிதல்.... நமக்கு
இருக்கிறதா??? என்ற கேள்வி எழுகிறது.
எதாவது
பிரச்சனைகள் நடக்கும் போது, அந்த பிரச்சனைகளிலிருந்து
ஒதுங்கி செல்லவே, பெற்றோர்கள் அறிவுரை கூறுகிறார் , ” நமக்கு
எதுக்கு தேவையில்லாத வேலை, பெரிய இடத்து
பொல்லாப்பு எதுக்கு “ என்ற அறிவுரைகளே அதிகமாக
இருக்கும்.
இன்றைய
திரைப்படங்களும், சிறுகதைகளும் .... மனிதர்களுக்கு அநியாயத்தினை எதிர்க்கும் தன்மையை உருவாக்குவதில்லை!!!
சமூகம்
சார்ந்த அறசீற்றத்தினை, இன்றைய கல்விமுறையும், வழி
காட்டும் நெறிமுறைகளையும் உருவாக்குவதில்லை. அப்படி இருக்கும் போது,
மேற்கண்ட தற்காப்பு பயிற்சிகள் ...... போட்டிகளில் பரிசு வெல்வதற்கு மட்டும்
பயன்படும்!!!! நிஜ வாழ்க்கையில் அல்ல!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment