தீபாவளி
நெருங்கி விட்டது. புத்தம் புது ஆடைகள்
வாங்குதல், பலகாரங்கள் தயாரிப்பு என அனைவரும் மும்முரமாகி
விட்டனர். அதிலும் புத்தம் புது
ஆடைகள் வாங்குவதற்கு, ஐவுளி கடைகள் நிரம்பி
வழிகின்றன.
” பெண்கள்
ஆடை தேர்வு செய்வதில், அதிக
நேரம் எடுத்து கொள்கின்றனர் “ என்ற
பொது சமூக கருத்தாக்கம் அதிகமாக
இருக்கிறது. அது சார்ந்த புரிதல்
உண்மையா? என்று ஆராய்வோம்.
பெண்களின்
மனநிலை பற்றி ஆராய்வதற்கு முன்னர்.....
ஆடைகளின் வியாபாரம் பற்றி ஆராய்வது அவசியம்.
பன்னெடும்
காலமாக... பெண்கள் அழகு பதுமைகளாக
சமூகம் கருதி வந்தது. ஆதலால்,
பெண்களின் அழகினை மேம்படுத்துவதற்கு ஆடை,
அணிகலன் ஆகியவற்றிற்கு முக்கியம் தரப்படுகிறது. இதனால் பெண்களுக்கான துணி
வகைகளும், துணி நிற வகைகளும்
இயற்கையே அதிகமாகி இருக்கிறது.
சமூகத்தில்....
இன்றளவும் பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறியவர்களாகவும் இருந்தாலும், பொருளாதார
சுதந்திரமும் இருந்ததில்லை!!!! ஆண்களை சார்ந்திருப்பவர்களாகவே உள்ளனர்.
ஆதலால்,
வியாபார நிறுவனங்களும் பெண்களை குறிவைத்து வியாபாரத்தில்
அதிக மாடல்களை அறிமுகம் செய்கின்றனர்.
மேற்கண்ட
காரணங்களினால்..... ஆண்களை விட, பெண்களை
அதிக துணி வகைகளும் உள்ளன.
ஆதலால், அதிக துணிகளில் ஒன்றை
தேர்ந்தெடுப்பதில், இயற்கையாகவே பிரச்சனைகள் உள்ளது. அடுத்து உளவியல்!!!
காலம் காலமாக...... ஆண்களை ஒப்பிடும் போது
, முடிவு செய்யும் இடத்தில்,பெண்கள் குறைவாகவே இருந்தனர்.
இதனால்...... முடிவு எடுக்கும் அனுபவம்
குறைவாகவே இருக்கும். ஆகையால், ஆரம்ப காலங்களில் குழப்பங்கள்
இருக்க தான் செய்யும். அது
போக போக சரியாகவும் வாய்ப்பு
உள்ளது.
மேலும்
பெண்களுக்கு ஆடை வாங்கி தரும்
உரிமை.... கடந்த காலங்களில் ஆண்களுக்கே
இருந்து வந்தது. இதுவும் மற்றொருமொரு
பிரச்சனை!!! இதையெல்லாம் தாண்டி, புதிய மனநிலைக்கு
வருவதற்கு பரிணாம வளர்ச்சிபடி நோக்கினால்,
50- 100 வருடங்களும் ஆகலாம்.
ஆண்கள்
துணி எடுப்பதற்கு, குறைவான நேரம் எடுத்து
கொள்வதில்லையா??? அவர்களிலும், அதிக நேரம் எடுத்து
கொள்பவர்களும் உண்டு. ஆனால், ஒப்பிடும்
போது குறைவு!!! அவ்வளவு தான்!!!
பின்குறிப்பு:
என் புரிதலில், சித்த மருத்துவ தத்துவ
அடிப்படையில் நோக்கில், கப உடலினர் துணிகளை
தேர்வு செய்வதில் அதிக நேரம் எடுத்து
கொள்கின்றனர்.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment