ஒய்வு பெற்ற அரசு ஊழியரிடம்
இருந்து போன்!!! அவருடைய பேரனுக்கு
உடல்நிலை சரியில்லை என்று அழைத்திருந்தார். பிரச்சனைகளை
பற்றி… .அவர் ஆரம்பித்து வைக்க,
அவருடைய மகன் முடித்து வைத்தார்!!!
நீண்ட உரையாடல்!! சுருக்கி தருகிறேன்.
” அவருடைய
பேரனுக்கு மூன்று வயதாகிறது. பிரிகேஜிக்கு
சென்று கொண்டிருக்கிறான். சரியாக சாப்பிடுவதில்லை!!! கோபம்
அதிகமாக வருகிறது!!! கோபம் வந்தால் சுவற்றில்
மூட்டி கொள்கிறான் அல்லது வீட்டில் உள்ள
பொருளை உடைத்து விடுகிறான் “ என்பது
அவனது பிரச்சனையின் சாரம்…..
” வருமானதிற்காக….
கிராமத்தினை வீட்டு வெளியேறி, நகரத்தில்
குடியேறி இருக்கிறார்கள். கணவன் மனைவி, மகன்
என மூன்று பேரை தவிர
வேறு யாருமில்லை!!! செல்ல மகன்… எது
கேட்டாலும் வங்கி தரும் பெற்றோர்கள்!!
தாத்தாவும் பாட்டியும்!!! சுற்றுபுறத்தாருடன் அதிகமாக பழக்கம் இல்லை!!!
புட்டிய வீட்டிற்குள்ளே அடைப்பட்டு கிடக்கிறான்!!! “ இது தான் அவர்களுடைய
சூழ்நிலை!!!
“ ஆங்கில
மருத்துவம் பார்த்திருக்கார்கள்!! இது ஒரு பிரச்சனையில்லை
என்று சொல்லியிருக்கிறார்…. ஹோமியோபதியும் பார்த்து இருக்கிறார்கள்!! சிறிதளவு முன்னேற்றம் இருக்கிறது. அடுத்தது தான்… எனக்காக அழைப்பு
விடுக்கப்பட்டிருக்கிறது.
“
” தினமும்
4-6 வரைக்கும் பெரிய சாக்லேட் சாப்பிடுகிறான்.
ஆதலால், உடலிற்கு தேவையான சக்தி முழுவதும்,
சாக்லேட்டின் மூலம் கிடைத்து விடுகிறது.
அதை தாண்டி பசிக்கும் போது,
பூரி கேட்டு சாப்பிட்டு விடுகிறான்.
அதை தாண்டி எப்படி பசிக்கும்????……
வீட்டுக்குள்
அடைப்பட்டு கிடக்கிறான். வீட்டிற்கு வெளியே சென்று விளையாட
ஆசைப்படுகிறான்; அனுமதி மறுக்கப்படுகிறது. அதனை
கோபமாக வெளிப்படுத்துகிறான்; பொருட்களை உடைக்கிறான்;
சுவற்றில்
முட்டி கொள்கிறான். ஆனால் பள்ளிக்கூடம் செல்ல
ஆரம்பித்ததும், பிரச்சனையின் தன்மை சற்று குறைகிறது;
அவனை வீட்டினை அடைப்பட்ட சூழ்நிலையை விட்டு விலகி, அருகில்
உள்ள குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தாலே, அவனுடைய
பிரச்சனை குறைந்து விடும்” இது தான்
தீர்வாக, அவருக்கு முன் வைத்தேன்!!!
--------------------------------------------------
இன்றைய
சூழ்நிலையில்… மேற்கண்ட பிரச்சனை என்பது ஒரு சாம்பிள்!!!
இது போல்… ஆயிரம் குழந்தைகளை
தினமும் பார்க்க இயலும்.
நம்முடைய
குழந்தை பருவ காலத்தை போல்…
இன்றைய குழந்தைகளின் காலத்தை எடுத்து கொள்ள
கூடாது!! அவர்களினை மனதினை புரிந்து கொள்ளுங்கள்!!!!
அவர்களின் உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்!!!
அதற்காக… கெட்ட விஷயங்களுக்காக வளைந்து
கொடுக்காதீர்கள்!!!
மேற்கண்ட
நிகழ்விலும், ஒரு நகை முரண்
உள்ளது. அவனுடைய சாக்லேட் வாங்கி
கொடுப்பதில், அதீத சுதந்திரமும், அருகிலுள்ள
குழந்தைகளுடன் விளையாடுவதில், அதீத கட்டுபாடும் விதிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் கட்டுபாடுகளும்… சில இடங்களிலும் சுதந்திரமும்
அளிக்கப்பட வேண்டும். அதன் எல்லைகளை வரையறுக்க
தெரிந்திருக்க வேண்டும். அந்த புரிதல் பெற்றொருக்கு
தெரிந்திருக்க வேண்டும். அதனை கண்டறிவதில் உள்ள
சவால்களை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.
ஒரு வளமாக சமுதாயம் உருவாக்கம்
என்பது இன்றைய குழந்தைகளின் வாழ்வியலை
கட்டமைப்பதிலேயே உள்ளது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment