Wednesday, September 14, 2016

உயிரின வளர்ச்சியும்... பரிணாம வளர்ச்சியும்

ஒவ்வொரு தளத்திலும், ஒவ்வொரு உயிரினத்திலும் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால்.. .அந்த மாற்றம் மிகவும் மெதுவானது; அதை நாம் கவனித்திருக்க மாட்டோம்!!!! அவ்வளவு தான் வித்தியாசம்.....
உண்மையாக நடந்த, இரண்டு நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்வோம்.
எங்கள் வீட்டில் உள்ள நாட்டு வகை ஆடு, நான்காவது ஈற்றாக, இரு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி மட்டும், பால் குடிக்க சென்றால் கொடுக்காது; நகர்ந்து சென்று விடும். மாறாக இரு குட்டிகளும் சேர்ந்து வந்தால் மட்டுமே, பால் கொடுக்கும்.
இது மாதிரியான நிகழ்வை.. இதற்கு முன்னர் கண்டததில்லை. அந்த ஆட்டிற்கும் , ஏதே ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது. பகுத்தறிவு இல்லையென்றாலும், ஐந்தறிவை கொண்டே, பரிணாமம் வளர்ச்சி ஏற்பட்டுக்கிறது என்று நினைக்கிறேன்.
எனது உறவினர் வீட்டில் உள்ள உயர் ரக ஆட்டின் செய்கை, இன்னும் அதீத வியப்பினை ஏற்படுத்துகிறது.
அந்த ஆடு சற்று வெள்ளை நிறமாக இருக்கும். அந்த ஆடும் இரு குட்டிகளை ஈன்றது. ஒன்று... தாயை போல் சற்று வெள்ளை நிறம், மற்றொன்று.. தாயிற்கு நேர் எதிராக கறுப்பு நிறம்.
குட்டி ஈன்றதிலிருந்து, கறுப்பு நிற குட்டிக்கு பால் கொடுப்பதில்லை. வீட்டில் உள்ளவர்கள், ஆட்டினை பிடித்து கொண்டே பால் கொடுக்க வைக்கிறார்கள். அந்த ஆட்டிற்கு... கறுப்பு நிற வேற்றுமை எப்படி தெரிந்தது.... புரியாத புதிர் தான்!!! மனிதன் தான் நிற வேற்றுமையால் அடித்து கொள்கிறான் என்றால், ஆட்டினம் சேர்ந்து விட்டது போலும்!!!
மேற்கண்ட இரு நிகழ்விலும், சிறியதொரு மாற்றம் ஏற்பட்டிக்கிறது. அதுவும் குட்டியிற்கு பால் கொடுப்பதில் மட்டுமே!!! முன்னது நேர்மறையானது.. பின்னது எதிர்மறையானது!!!!
ஆட்டினம்... ஐந்தறிவு உடையது என்பதே அனைவரும் அறிந்ததே!!! அந்த ஐந்தறிவிலும்... அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி நிலையை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது!!!!

No comments:

Post a Comment