மாற்றம் என்ற வார்த்தையை, இன்றைய நிலையில் அதிகமாக காண்கிறோம்!!! கேட்கிறோம்!!! ஒரே இரவில் நடந்து, அடுத்த நாள் காலையில் மாறி விடுமா என்ன???
மாற்றத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமலே, நாம் மாற்றத்தை பேசுவது தான், மிகப்பெரிய அபத்தம். மாற்றம் என்பது தினந்தோறும் நடந்து கொண்டோ தான் இருக்கிறது. ஆனால் , அவையெல்லாம், சரியான பாதையில் நடக்கவில்லை என்ற எண்ணம் வரும் போது. மாற்றத்தை பற்றிய சிந்தனை எழுகிறது.
இந்தியாவின் சுதந்தரத்திற்கு மூலமாக கருதப்பட்ட காந்தியின் சத்தியாக்கிரகம் , ஒரே இரவில் ஏற்பட்டதும் அல்ல.. தொடர்ச்சியான எண்ண அலைகளும், மக்களும் அதை பின்பற்றியதால் தான் ஏற்பட்டது. சுதந்திர போராட்ட கால சூழ்நிலை, அதற்கு ஏற்றால் போல் இருந்தது. ஆனால் இன்று, நல்ல விஷயங்களை சொன்னாலும், அதிலுள்ள சின்னக்குறையையும் கண்டுப்பிடிக்கும் விதாண்ட வாத மனநிலையோ உள்ளது.
இதையெல்லாம் தாண்டி, மாற்றம் என்பது இரு முனைகளிலும் நடைபெற வேண்டியது. அது ஒரு முனையில் இருந்து நடைபெற்றாலே, எல்லாம் சரியாகி விடும் என்பதெல்லாம், மூட நம்பிக்கையை போன்றது என்பேன்.
இன்றைய நிலையில், ஒட்டிற்கு பணம் கொடுப்பது அதிகரித்திறது என்பது எல்லோரும் அறிந்ததே. அரசியல்வாதி கொடுப்பதினால், வாக்களர்கள் வாங்குகிறார்கள் என்பதும், வாக்காளர்கள் பெற்று கொள்வதாலே அரசியல் வாதிகள் கொடுக்கிறார்கள் என்று மாற்றி மாற்றி குற்றம் சொல்வதே, நமது வழக்கமாகி விட்டது. நாம் வாங்குவதை நிறுத்தினால், ஜனநாயகம் தலை நிமிரும். மாறாக, நான் வாங்கும் 100 ரூபாயால் என்ன நடந்து விட போகிறது என்ற எண்ணமே, மாற்றம் என்ற சிந்தனையை தவிடு பொடியாக்கி விடுகிறது.
இதை போல் ஆயிரம் எடுத்து காட்டுகளை கூறி கொண்டே போகலாம். லஞ்சம் வாங்குவது, இலவசம் கொடுப்பது, சினிமாவில் ஆபாச காட்சி .... இப்படியாக பட்டியல் நீளும்.
அடுத்தவரிடமிருந்து தான் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பகல் கனவெல்லாம் வேண்டாம்... மாற்றம் நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும்.... இப்படியாக ஒவ்வொருவரும் எண்ணினால், நாளைய தினம் உண்மையான விடியலாய் அமையும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment