”புற சூழ்நிலைக்கு ஏற்ப, நம் மனதை மாற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில், இந்த சமூகத்தினால் புறக்கணிப்படுவீர்கள்.”
மேற்கண்ட சொல்லாடல், எல்லா தளங்களிலிருந்து கேட்டு இருப்பீர்கள். அதாவது உங்களை குரங்கு மனநிலை போல் இருக்க வைப்பார். இந்த சமூக புற சூழ்நிலையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு, சுழ்நிலைக்கு ஏற்ப மாற்றி கொள்ளும் மனிதரால், தான் கொண்ட லட்சியத்தில், வெற்றி பெற இயலுமா??? நிச்சயமாக கஷ்டம் தான்!!!
தான் கொண்ட லட்சியத்திற்காக போராடுபவர்கள், சுழ்நிலைக்கு ஏற்ப மாறாதவர்களே இருப்பார்.சிறிது பிசகினாலும் வெற்றியை பறிப்பது கடினமாகி விடும். சில சமயங்களில், சமூகத்தினால் வெளித்தள்ளப்பட்டு இருக்கலாம்.
இந்த வாழ்க்கை முரண்பாட்டு நிகழ்வை, பல தருணங்களில் கடந்து சென்றிருப்போம். கவனித்திருக்க மாட்டோம். இந்த முரண்பாட்டையும், மிக அருமையாக கையாளும் மனிதர்கள் சிலரே!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment